பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

43

வாழவேண்டும் என்று
விதியிருந்தது
ஆனால்
விதியின் பெயர் சொல்லிப்
புனைபோல் மிதந்து செல்ல
வெள்ளத்தைக் காணோமே

வறண்ட மணற்காட்டிலே
(ப. 24, இருந்தேன்)

கஸ்தூரிரங்கன் எளிய நடையில் நம்பிக்கை வறட்சியை மறைக்காமல் சொல்லுகிறார்:

சிரிக்காமல் போனாலும்
அழவேண்டாமே.
இனிக்காமலிருந்தாலும்
கசக்காது இருக்கிறதே

அதுவே போதும்.
(ப. 18, பழம்புளி)

“எனக்குப் பகை நானே” என்கிறார் சுப. கோ. இரண்டு படைகள் உள்ளத்தில் போராடுகின்றன. தனக்கு வெளியே எப்போராட்டத்தையும் காண அவரால் முடியவில்லை.

வைத்தீஸ்வரன் எழுதுகிறார்:

கருத்தை மருட்டியது கவலை
கிட்டாத கசப்பும்
நெஞ்சக் குமட்டிவர
முகத்தின் முக்கால் பரப்பும்
இருள் மண்டி விளிம்பு கட்ட
விதியை வெறுவெளியில்
குத்தி நின்றேன்
இது சவமோ? தவமோ எனப்
பகலிரவு பிரமையொழித்து

பாழும் கல்லாய்ச் சமைந்திருந்தேன்!
(ப. 18, பொன் வேட்டை)

தனிமனிதனும் மீட்சியும்

இந்த நம்பிக்கை வறட்சிக்கு அவர்களது ‘தனிமனிதம்’ தான் காரணம். எல்லையற்ற சுதந்திரத்துக்காக மனத்தினுள் போராட்டம் நடத்துகிறவர்கள் கற்பனையிலே அந்தச் சுதந்திரத்தை அனுபவித்துக்கொள்ளுகிறார்கள். மணதனைப் படம் தீட்டும் ஓவியனும் சிலையாக்கும் சிற்பியும் கவிதையாக்-