பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நா. வானமாமலை


கும் கவிஞனும் மனிதனைச் சிறைபிடிக்கிறார்களாம். இவர்கள் எழுதும் கவிதையில் எதனைச் சிறை பிடிக்கிறார்கள்?

சி.சு. செல்லப்பா எழுதுகிறார்:

தேய்வும் கம்மலும் அழுதலுமே
எனக்குப் பின்
எனக்குப் பின்
உளியாலும் கோலாலும் பேனாவிலும்
விதைக்காதே என்னை
கலைக்குள்

அடைக்காதே, சொன்னேன்
(ப. 29, கலைச்சிறை)

சுதந்திரம் அல்லது மீட்சி எதுவென அவரே தெளிவாக்குகிறார்.

சாயை மறைத்த புறமோ
இருள் நீங்கவில் தெளிவாகும்
மாயை மறைத்த அகமோ

‘தான்’னை அறிதலில் விரிவடையும்
(ப. 27, மீட்சி)

நிலவைப் பார்த்தவுடன் தோன்றிய உணர்வுத் தாரையில் தனது எல்லையற்ற சுதந்திரத்தைக் காண்கிறார் பேரை. சுப்பிரமணியன்:

சுட்டு விட்டேன்
விழுந்தது நீலத்திரை
விளிம்பிட எவருமில்லை
ஒளி சிரித்தது உச்சியில்
நிறை—
மழலை உலகிடைப்பூ.

போராடவேண்டியது எதுவும் இவர்களுக்குத் தங்கள் உள்ளத்திற்கு வெளியே இல்லை!

கூடார்த்தம்

“உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றார் பாரதியார். கம்பரும் கோதாவரியின் தெளிந்த நீரைக் “கவியெனத் தெளிந்து சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி” என வருணிக்கிறார். சிறந்த கவிதையில் தெளிவு இருத்தல்வேண்டும். ஆனால் இவர்களுடைய கவிதையில் தெளிவு இராது. அதனைக் ‘கூடார்த்தம்’