பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நா. வானமாமலை

கலக்கினால் காவிரியும்
     காலம் பொருள் காட்டும் (சுந்தர ராமசாமி)

காவிரியே கலங்கித்தான் போகிறது. அதைக் கலக்கினால் கழிவுப் பொருளைக் காட்டுமாம். இவர்கள் அக உலகம் தான் காவிரியாம். அகாதக் கலக்கினால் காட்டப்படுவது எது என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள்!

எழுத்தாளன் யார்?

அகத்தின் காதைத் தானே அவர்கள் வெளியே காண முடியும்? ‘நகத்தை வெட்டியெறி’ என்ற கவிதையில் சுந்தரராமசாமி எழுதுகிறார்:

நகத்தை வெட்டியெறி—
    அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி—
    அழுக்குச் சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு

    நகமும் எதற்கு அழுக்குக்கு!

எழுதுவதே வேதனை தான். அவன் எழுதுவது தனது அக உலகத்தைப் பற்றியேதான். கணப் பொழுதுகளில் நம்பிக்கையுடையவன் தன்னை மட்டும் என்றும் நிலைத்திருப்பவனாக எண்ணிக்கொள்ளுகிறான்:

காற்றைத் திரித்து நகத்தைக்
     கிழித்து விளக்கேற்றி
ஊனைக் கரைத்து உயிரைப்
     பிழிந்து எழுத்தாக்கி
நெஞ்சைக் குத்தி விரலைத்
    தேய்த்துப் படைத்தேன்
திரியை எரித்தது விளக்கு
விளக்கை அணைத்தது காற்று
விரலையும் கரைத்தது குருதி
எனினும்
என்னை அழிக்க யாருண்டு?

எழுத்தில் வாழ்பவன் அன்றோ யான்?

இலக்கியம் வாழ்க்கைகப் போராட்டத்திற்கு உணர்ச்சி ஆட்டுவதோ, அறிவூட்டுவதோ அன்று; அது கரக ஆட்டம்