பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

47

அல்லது கண் கட்டு வித்தை. அதனைப் படிப்பவர்கள் ‘வாசகர் கும்பல்’ என்று எழுதுகிறார் தி. சோ, வேணுகோபாலன் :

சொல்வதிரண்டு வகை
சிந்தித்துச் சொல்லல்
சிந்தை இலையாதல்
கரகம் அல்லது கண்கட்டு
சொன்னவன் புலவன்
கண்டவன் கலைஞன்
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்

வாசகக் கும்பல்.

எத்துணை அவட்சியம் வாசகன் மீது! தன்னை உயர்த்தி, வாசகனைத் தாழ்த்தும் இவர்கள் வாசகக் கும்பலை மதித்து என்ன எழுதுவார்கள்? இவர்களது சோக ஓலங்களைக் கேட்டுத் தீரவேண்டுமென்றுதான் கூறுவார்கள் போலும்!

இன்னும் தெளிவாகக் கவிஞனது போதை மயக்கத்தையும் அவனது படைப்பையும் பற்றிக் ‘கவி வேதனை’ என்ற கவிதையில் தி. சோ. வேணுகோபாலன் எழுதுகிறார்.

விட்டில் விளக்கில் எரிந்து சாவதை 56 வரிகளில் விவரித்து விட்டு (இப்படிமத்தின் மூலம் மனிதனது துன்பத்தை ரசிக்கிறார் போலும்) இக்காட்சியைக் காணாத எழுத்தாளன் எங்கேயிருக்கிறான் என்று கேட்டுப் பதிவளிக்கிறார். எழுத்தாளன். இத்துன்ப உலகத்தில் வாழாமல் எங்கு போய்விட்டான்?

எழுத்தாளன் எங்கே
கேட்கப் போனேன்
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்த பின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக்கடையில்
கவிஞனைக் கண்டேன்
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது
பதில் ஒரு குமுறல்.
இருட்குகை யொன்றில்

இலக்கியப் பொருளில்