பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நா. வானமாமலை

சோதனை நடந்ததாம்
தட்டித் தடவினான்
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
இருளில் குமைந்த
பொருளின் ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவப் எங்கே ?
பொருளும் மெய்யார்
பயனும் உண்டா ?
எனக்குத் தெரியவே
தெரியாது!
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்

தெரியாது.

இக்கவிதையில் கவிதைக்கும் சமூகவாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை என்றும் ஒரு கவிஞனுள்ளத்தில் அது மது மயக்கம் போன்ற (எஃசிஸ்டென்ஷியலிஸ்டு) போதை உணர்வினால் தோன்றுவதென்தும் அதனை யாரும் அறிந்து கொள்ள முடியாதென்றும் சொல்லுகிறார்.

படிம உத்தி

இவர்களது படிம உத்தியெல்லாம் விளங்குவதை விளங்காமல் செய்து கூடார்த்தமாக்கத்தான். இவ்வுத்தியெல்லாம் டி. எஸ். எலியட்டிடம் கற்றுக்கொண்டதுதான். தூலத்தைச் சூக்குமத்தால் விளக்க முயன்று, சூக்குமப் படிமங்களால் வாசகனை மயக்குவதும், பொருள் தெரியாமல் திண்டாடச் செய்வதும் இவர்களது வழக்கம். இப்படிமங்களில் பெரும் பாலானவை சாவோடும் பிணத்தோடும் அருவருக்கத் தக்கனவற்றோடும் தொடர்புடையனவாக இருக்கும். உதாரணமாகச் சில படிமங்கள்:

1 சுடுகாட்டை
உன்மத்தா
உறைவிடமாய் நீ கொண்டாய்.

2 சிறிதில் பெரிதின் பளு
பாழின் இருளைத் தொட்டும்

நுதலில் இட்ட பொட்டு