பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

49

பார்வைக் கயிறு அறுந்து
இமையுள் மோதும் குருடு.

3 உன் சாம்பல் மேனிப்பூச்சும்
சவச்சிரிப்பும் சுடவை நாற்றமும்
சுழித்துப் பொங்கும் நச்சரவும்
என்ன குறித்தன?

4 மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு
காலன் செய் ஹோமத்தில் உடல்
நெய்யாகும் காட்சி.

5 ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்
காற்றைச் சிறகின் மேல்
ஏற்றிச் சுழன்றது
வட்டங் குறுகியது
சொட்டாமல் திரி நுனியில்
நிற்கும் ஒளித்திவலை

மெய் தீண்டும் காட்சி ‘சொய்’ என்னும் விசும்பல்.

புதுக்கவிதைகளின் உள்ளடக்கத்தை இதுவரை விரிவாகவே கண்டோம். இவ்வாராய்ச்சியிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு நாம் வர முடியும்.

புதுக்கவிஞர்கள் வரலாற்றுப் போக்கில் உருவான ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் வாழ்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. இச்சமுதாயச் சூழ்நிலையில் அவர்கள் உள்ளங்களில் உருவான எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அகவயமாகத் திரும்பி உள்ளத்தினுள் வாழ முயற்சி செய்கிறார்கள். தங்கள் உள்ள இயக்கத்தை அறிய ஃபிராய்டை வழிகாட்டியாகக் கொள்கிறார்கள்.

இதனால், வாழ்வில் மனிதன் முன்னேறுவதாகவோ, வரலாற்று ரீதியில் மனித இனம் பல வெற்றிகளைப் பெற்று வருவதாகவோ இவர்களுக்குத் தோன்றவில்லை. இயற்கையையும் சமுதாயத்தையும் ஒரு மாறாத நிலையாகக் காண்கிறார்கள். மனித வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய புதிய தடம் எதுவும் இவர்கள் கண்களில் படுவதில்லை. தற்காலச் சமூக அநீதிகளுக்குக் காரணம் தனிச் சொத்துரிமை முறையும் சொத்துடைமையாளர்களின் ஆதிக்கமும்தான் என்ற உண்மையை