பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

53

உலகப் போராட்டத்தில் தமது ஸ்தானத்தைத் தீர்மானிக்க இயலாத தத்துவத் தெளிவில்லாத எழுத்து மன்னர்கள் உழைக்கும் வர்க்கத்துக்கும் உடைமை வர்க்கத்துக்குமான போராட்டத்தைக் காண அஞ்சி, தமது மனக்குகைகளுக்குள் ஒளிந்து கொண்டு, தமது தனிமனிதத்தையும் தனிமனிதச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தங்களைத் தாங்களே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமக்கு வெளியே உள்ளதெல்லாம் தங்களை மருட்டும் பேய் பிசாசாகவே தெரிகிறது. புற உலகில் மனிதனது முன்னேற்றமும் வெற்றிகளும் இவர்களுக்கு மாயை. தம் உள்ளத்தில் வெளியுலகப் போராட்டத்தினால் விளைந்த பீதியே உண்மை. வெளியே உடைமையாளர்களது ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவிப்பதற்காகவும் உலக மக்களை விடுவிப்பதற்காகவும், உலக முழுவதும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் ஏதோ தங்களுக்குச் சம்பந்தமில்லாத தொலைக் காட்சிகள். உலகையே மாற்ற நடைபெறும் போராட்டங்களில் இவர்கள் எங்கு நிற்பதென்று முடிவு செய்துகொள்ள முடியாமல் இவர்களது தனி மனித உணர்வு தடைசெய்கிறது. தங்கள் மனித உணர்வை இவர்கள் வளர்ந்து வரும் உழைக்கும் மக்களின் சமுதாய உணர்விற்கு எதிராக நிறுத்தி, தாங்களே ஆன்மாவில் பிளவுபட்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இத்தனி மனித வீக்கம், மனநோயாக வளர்ந்து, புற உலக இயக்கத்தின் பிம்பங்கள், படிமங்கள், பிரதிபலிப்புகளான அக உலகையே இவர்கள் பாதுகாத்துக்கொள்ளவும் மாற்றவும் முயலுகிறார்கள். கண்ணாடியில் விழும் பிம்பத்தை உண்மையென்று நம்பி, அந்தப் பிம்பத்தை மாற்ற முயலுகிறவர்களைப் போல அக உலக உளைச்சல்களையே பாடுகிறார்கள். புற உலகின் இயக்கம், தன் நிஜபிம்பங்களைத் தமது மனத்தில் பதிவு செய்யத் தங்கள் அகக் கண்ணாடிகளின் அழுக்கை இவர்கள் போக்கிக்கொள்ளுவதில்லை.

இதனால்தான் அவர்களது கவிதை உள்ளடக்கம் பற்றி என்னுடைய புதுக்கவிதையின் உள்ளடக்கம் என்ற கட்டுரையின் முடிவில் இவ்வாறு எழுதினேன்.

இவர்கள்து சோக ஓலங்களும் நம்பிக்கை வறட்சி ஒப்பாரிகளும் சாவுக் காதல் கீதங்களும் வாழ்க்கை மறுப்புப் பாடல்களும், நல்வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடும் மக்களுக்குச் சிறிதும் தேவையற்றவை. இவர்களுடைய புதுக்கவிதைகளில் புதுமையுமில்லை; கவிதைத் தன்மையுமில்லை; புரட்சியுமில்லை. இவை வாழ்க்கைப்