பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நா. வானமாமலை

போராட்டத்துக்குப் பயந்து சாவை விரும்பும் பலவீன மனிதர்களது கூக்குரல் தான்.

இவ்வகையான அகவய நோயாளிகளின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தெளிவாக்கச் சிந்தனைச் சிதறலை மேற்கோளாகக் காண்போம்:

நான் என் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக நினைக்கிறேன். ஒரு காலத்தில் நான் மிகவும் சுதந்திரமாக இருந்ததாக உணர்கிறேன். நான் பின்னால் திரும்பிப் பார்க்கவேண்டும். அந்த ஞாபகங்கள் விநோதமானவை.

எனக்கு முன்னால் அமைப்புகள் பயனில்லாத செருப்புகளாக உலா வருகின்றன. I mean systems. அவை எனக்குப் பொருந்தவில்லை. அவை வலியுறுத்தப்பட்ட வடிவங்களாகிவிட்டன. சில எடுபடும் போல் தோன்றி விட்டன. நாள் அந்தச் செருப்புகளைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? எனது தற்போதைய செருப்பு என்று எதுவும் இல்லை.

எதைப் பற்றியும் நிச்சயம் தோன்றுவதில்லை. யெக்ஸ் மட்டும், உடம்பில் தோன்றும் வலிகள் மட்டும் நிச்சயம் படுகின்றன. I feel them, therefore I exist.

Knowledge is sorrow, done is sorrow. Sorrow is perhaps knowledge.

இப்போதைய எனது தனிமை விவரிக்க இயலாமல் நானடையும் வேதனையை உனக்குச் சொல்ல வேண்டுமோ. என்னை விட்டு எல்லா ஊன்றுகோல்களையும் எறிந்த பின்பு பற்றுக்கோடாய் எதுவுமே அற்று இந்தப் பெரிய சமுத்திரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

A constant revolt against everything.

எனக்கு விடுதலை வேண்டும். தப்பித்தல் அல்ல. விடுதலை.

இந்தப் போக்கு, பழைய அகவயப் புதுக்கவிஞர்களின் உள்ளடக்கத்தில் இன்றும் காணப்படுகிறது. விடுதலை வேண்டும் என்று சொல்லுகிறவர்கள், உலக மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் கண்டு, அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடும், உலக மக்கள் சக்திகளோடு இணைத்துக் கொள்ளாமல், தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டு, விடுதலை வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்று வருகிறபோது, தாம் முன்பு சுதந்திரமாக இருந்ததாக இவர்கள் உணருகிறார்கள். தாகூர்