பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

55

கூறுவது போலத் தங்க விலங்குகளை நினைத்து, அது போன பின்பு அதற்கு ஆசைப்பட்ட கிளியைப் போல. வரலாற்று ரீதியாக, ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு, உழைக்கும் வர்க்கங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கப் பல அமைப்புகளை நிறுவிப் பாதுகாத்தன. அவற்றை உடைத்தெறிந்து தங்களை விடுவித்துக்கொள்ள அடிமைப்பட்ட வர்க்கங்கள் போராடியுள்ளன. வெற்றியும் பெற்றுப் புதிய அமைப்புகளை அமைத்துக்கொண்டன. அடிமைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட—அமைக்கப்பட்ட அமைப்புகளும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட அமைப்புகளும் இவர்களுக்குப் பழைய செருப்புகள்தாம். அமைப்புகளே இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சிங்கம், புலி போலச் சுதந்திரமாக இருக்கவேண்டுமாம். மக்கள் சமுதாயமாக வாழ்கிறவர்கள். தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான உற்பத்தியைத் தாங்களே படைத்துக்கொள்ளுபவர்கள். இதற்கான அமைப்புகளைப் படைப்பவர்கள். கால வளர்ச்சியால் பழசாகிப்போன அமைப்புகளை அழித்துவிட்டுக் தேவையான அமைப்புகளைத் தோற்றுவித்துக் கொள்ளுவார்கள்.

வரலாற்றுப் பார்வை, தத்துவப் பார்வை, சமகால நிகழ்ச்சிகளை அறியும் அறிவுக் கூர்மை எதுவுமில்லாத ஒரு குழப்பச் சிந்தனைதான் இந்த அகவய எழுத்தாளர்களுக்கு உள்ளது.

இந்தப் போக்கு இப்பொழுது வலுவிழந்து வருகிறது. உலக சமுதாயப் போராட்டத்தின் பேரொளி. இவர்களில் பலரது அகவயக் கோட்டைகளுக்குள் கேட்கிறது. அதனால் கோட்டைகள் உடைகின்றன. ஆயினும், அகவயக் கோட்டைகளை மண் வைத்துப் பூசி அதனுள்ளேயே கிடந்து சாகப் போகிற பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போக்குக்கு உதாரணங்கள் சில தருவோம்.

கடிகாரத்தை முன் வைத்துச் சொல்லியவை:

இப்படியெல்லாம்
உள்ளிருந்து தெறித்து விழுகின்ற
இக்கணத்தை மீறி
உன்னை யுகயுகமாய் நான் ஆட்கொள்ள
முற்படும் போதெல்லாம்
சூன்யமாய் கல்வி
பிடறியில் அறைகிறாய்—இனியும்
உனக்கெதிராய் நான்

முயற்சிகள் எடுக்கப் போவதில்லை