பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக் கவிதையின் உள்ளடக்கம்

63

கலசத்தை நொறுக்கித்தள்ளி
அடித்தளத்துக்கு அஸ்திவாரமிடப்பட்டது

பெரிய கோட்டை கட்டினார்கள்
எத்தனை அழகு
எவ்வளவு செலவு
சுற்றிலும் அகழி
முற்றிலும் முதலைகள்
ஆனால்
வாசல் அமைக்க மறந்து விட்டார்கள்.
பாட்டாளிகள் வழியமைக்கப் புறப்பட்டபோது—
எத்தனை எதிர்ப்பு!
அந்த எதிர்ப்பிலேயே
கோட்டை
தரைமட்டமாகியது
தரை கோட்டையாகியது
என்ன விந்தை!

உலகைப் படைத்த தொழிலாளி கடவுளின்
சந்நிதியில்
இதோ நான்
ஆசைப்பூக்களோடு நிற்கிறேன்
இதை ஏற்றுக் கொள்ள
இறைவன் இன்னும் வரவில்லை.
இன்று நல்ல நாள்!
இதைப் படைக்காமல்
நான் போகப் போவதில்லை!

வியத்நாம் பற்றி ஒரு கவிதை—அதன் தலைப்பு அக்கினிக் குஞ்சுகள்.

'

டாலர்கள் குண்டுகளாகின்றன
டாங்கிகள் எரிமலைகளாகின்றன
விமானங்கள்
நெருப்பு மழை
பொழிகிறது!
நாடே பற்றி எரிகிறது
உலக படத்திலிருந்து ஒரு நாடு ஒழிந்தது.