பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நா. வானமாமலை

இங்கு
எந்தச் சிவனும்
கால் தூக்கத் தேவையில்லை.
உங்களின்
நூறு—ஆயிரம்—கோடி கரங்களின்
அசைவுகளே
ஊழிப் பிரளயங்களின்
உற்பத்திக் கேத்திரங்கள்

வேள்வி செய்யும் எம்
வினாடியுளிகளை
வினாவிக் கொண்டிருக்கிறோம்
கரையேறப் போகிறோம்—நாங்கள்
கடல் மீறப் போகிறோம்.

வினாடிகள் துளிதுளியாகச் சேர்ந்து கரையேறிக் கடலலை மீறப் போவதாக அவை பேசுவதுபோலத் தமிழன்பன் எழுதுகிறார். இதில் தத்துவகணம் இருக்கிறது.

தற்காலத் தனி உழைப்பாளிக்குச் சமூக உணர்வூட்டி, சமுதாய மாற்றப் போராட்டத்தில் அவனது பணியை உணர்த்தி அகவயச் சிந்தனை, சோக முனகல்கள், துன்பக் குமுறல்கள் முதலிய இயலாமைச் சிந்தனைகளிலிருந்து மீட்டுப் போராடுகிற உழைப்பாளர் மூலபலப் படையோடு இணைக்கிற கவிதைகளும் பூத்துள்ளன. அப்படையின் வீரநடைக்கு, நடைப்பாடல்களும் வெற்றிக்கு முரசு கொட்டுகிற பாடல்களும் தோன்றுகின்றன. வருங்கால நம்பிக்கையை, உலகை மாற்றுகின்ற உழைப்பாளி மக்களுக்கு அளித்து, கடந்த கால, நிகழ் காலப் புரட்சிகளின் வெற்றிகளும், தானே மாற்றியமைத்த சமுதாயத்தைத் தானே பாதுகாத்து, மனிதர் அனைவரும் சுதந்திரத்தோடு வாழும் நிலைமைகளை உருவாக்கப் பாடுபடும் மனிதனது அறிவுத் திறனையும் உழைப்புத் திறனையும் போற்றிப் புகழ்கிற கவிதைகள் பல தற்கால முற்போக்குப் பூங்காவில் பூத்து மணம் வீசுகின்றன.

மேலே கூறிய தன்மையுடைய கவிதைகளுக்குச் சில உதாரணங்கள் தருவோம். ‘ஓ... மே தினமே’ என்ற தலைப்பிட்ட கவிதை இவ்வாறு கூறுகிறது:

நீண்ட காலமாக
கோபுரத்தைத் தாங்குவது
தானே என்று இறுமாந்திருந்த