பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

63

நம்மீது அவர்களெறிந்த
கற்களை
பொறுக்கி வையுங்கள்
மார்பில் முத்தமிட்ட
துப்பாக்கி ரவைகளை
எடுத்து வையுங்கள்
இரத்தம் கசிந்த
தடியடித் தழும்புகளை
எண்ணி வையுங்கள்.
ஏனென்றால்—
அவர்கள்
வட்டி வாங்கியே
பழக்கப்பட்டவர்கள்.

பழி வாங்குகிற உணர்ச்சி இங்கே இருக்கிறது. ஆனால் சமுதாய மாற்றச் சக்திகளைப் பற்றிய அறிவு இங்கே இல்லை.

உணவில்லாமல்
எமது மக்கள்
இரத்தம் வெளுக்கிறது.
இந்த அனலில் எரிந்து
நாம் கொள்கையில்
இரத்தமாய் சிவக்கிறோம்.

பசியுணர்வே, புரட்சியுணர்வாகிவிடும் என்ற Philosophy of powerty என்னும் தத்துவச் சிந்தனை இது. பசி மட்டும் கொள்கையைச் சிவப்பாக்குவதில்லை. அது பத்தும் பறந்து போகச் செய்யலாம். சமுதாய இயக்கத்தின் வர்க்க முரண்பாடுகளில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் போராட்டமும் தத்துவப் பார்வையுமே உலகை மாற்றும் சிவப்புக்கொள்கையைப் படைக்கும். பசியும் கோபமும் அல்ல.

இதே கவிதையில் ஆதிக்கக்காரர்களின் புரட்சித்தடை மதில்கள் எப்படி உடைக்கப்பட்டு, புரட்சியும் புத்துலகமும் தோன்றும் என்பதைச் சரியான தத்துவப் பார்வையில் கவிஞர் கூறுகிறார். இங்கே வரலாற்றுப் பிரக்ஞையும் இயங்கியல் அறிவும் கவிதையில் மின்னுகின்றன:

சிம்மாதனங்கள்
சீரழிய
செல்வமேடுகள்
சரிய