பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

நா. வானமாமலை

பட்டம்

தாலியிழந்த பெண்ணுக்கு
சமுதாயப் பல்கலைக் கழகம்
அளித்து கெளரவித்தது
விதவைப் பட்டமும்

வெள்ளைப் பொன்னாடையும்.

தாலியிழந்தவளுக்குச் சமுதாயம் அளிக்கிற பட்டங்கள் இவை. தெரிந்ததுதான். இதனைக் கண்டு கோபப்படுகிறார் கவிஞர். இது பல்கலைக்கழகங்களுக்குக்கூடப் பொருந்தும். பயனற்ற கல்வியை இவ்வாறு தாக்குகிறார். இந்நிலைமையை எதிர்க்கத் தாலியிழந்த பெண்ணுக்கு என்ன சொல்லுகிறார்? வெறும் புலம்பல்தானா அவளுக்குக் கதி?

இதே போல நிராசைகளை நிரந்தரமாக்கும் கவிதைகளே பெரிதும் வெளியாகின்றன.

இயல்வது

கோடை வரும்
புழுங்கலாய்
வியர்வையாய்
பிசுபிசுப்பாய்
தலை எரிப்பாய்
கால் தகிப்பாய்
மீண்டும் கோடை வரும்
கோடை வரும் காலமெல்லாம்
செருப்பு வாங்கும் ஆசை வரும்
கோடை போகும் வழியோடு
செருப்பும் சேர்ந்து கொள்ளும்.

இதில் இருண்மையில்லை. கருத்து தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. நிராசைதான் கவிதையின் கரு. அது மட்டுமன்று. இயற்கையில் கோடை வந்து மனிதன் உடலை வாட்டுவது இயற்கை. அது செருப்பு வாங்கும் ஆசையை ஏற்படுத்தும். ஆனால் வாங்க இயலாது. கோடை போகும்போது செருப்பும் சேர்ந்துகொள்ளும்.

இதைப் பற்றி ஜீவானந்தம் ஒரு பாட்டுப் பாடியுள்ளார். ‘காலுக்குச் செருப்புமில்லை’ என்ற பாடல். கடைசியில் என்ன முடிவு கூறுகிறார்? காலுக்குச் செருப்பும் குண்டிக்குத் துணியும் வயிற்றுக்குக் கூழும் கொடாத இச்சமுதாயத்தை நொறுக்கித்-