பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உணவு என்கிறபோது சந்தோஷ உணர்வு ஏற்பட வேண்டும். உண்+அவு என்று பிரிகிறது இந்தச் சொல். உண் என்றால் அனுபவி. அவு என்றால் ஒழுங்காக, உணவை ஒழுங்காக ரசித்துப் புசிக்க வேண்டும்.

உணவை உண்டபின், உடல் உற்சாக உணர்வோடும், உள்ளமானது சுகத்தோடும் இருக்க வேண்டும். அதுதான் அளவான உணவு. ஆத்மசுகம் அளிக்கும் உணவு. உடலை வளர்க்க உறுதுணையாக இருக்கும் உணவு.

உண்ட பிறகு களைப்பு ஏற்பட்டால், அது அளவுக்கதிகமாக, ஆசை வெறியிலே சாப்பிட்டதாக அர்த்தம். அதிகமாக உணவு இரைப்பைக் குள் போனபிறகு, உணவு செரிமானம் செய்ய, இரத்த ஓட்டம் அங்கே திருப்பி விடப்படுகிறது.

மற்ற முக்கிய உறுப்புகளுக்குப் போகின்ற இரத்த ஓட்டம் குறைவதால், மற்ற உடல் உறுப்புக்கள் உயிர்க்காற்றும் இரத்தமும் போதிய அளவு கிடைக்காமல் களைத்துப் போகின்றன. மலைத்துப் போகின்றன.

அதனால் உணர்வு குன்றுகிறது. உடல் சோர்வடைகிறது. அதனால், எங்கேயாவது படுத்தால் பரவாயில்லை என்கிற நினைப்பு மேலோங்குகிறது. இப்படி, சாப்பிட்டு சாப்பிட்டு, உடலைக் கெடுத்துக் கொண்டு பாடாய் படுகிற மக்கள், அறிவுள்ளவர்களாக எப்படி மதிக்கப்படுவார்கள்?

தொண்டர் என்றால் அடிமை. அல்லதோ நல்லதோ தமக்கு இட்டவேளைகளில் ஈடுபடும் அடியாள். உலகப்