பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தட்டுக் கெட்டுப் போகாமல் ஜெயிப்பதும் ஒரு சாதனைதானே!


33. கல்வியும் கலவியும்

அச்சுக் கோர்க்கும்போது, கல்வியில் உள்ள புள்ளி ஒன்று போனால், கலவி என்று மாறிவிடுகிறது. அபசாரம்தான். கல்வி கற்பது புனிதம். கலவி செய்வது அநாகரிகம். இப்படி எல்லாம் புலம்பிய காலம் உண்டு.

இப்பொழுது கலவி விஷயத்தை கல்வியாக்குங்கள். பாடமாக்குங்கள் என்று பண்படாத காட்டுமிராண்டிகள் சிலர். பத்திரிக்கையில் எழுதுகின்றனர். மேடைகளில் முழங்குகின்றனர்.

கல+வி = அறிவோடு கலத்தல் கலவி. புலம் ஒன்றிப் போக உணர்வோடு கலத்தல் புலவி. உள்ளத்தால் ஒத்துப் போதல். உடலால் ஒட்டிப்போதல், உணர்வால் ஒன்றிப் போதல்தான் கலவியும் புலவியும்.

சுவையான சமையலுக்கு கை பக்குவம் - படித்து வருவதல்ல. அனுபவத்தால் வருவது; கலவியும் கற்று வருவதல்ல. பெறுகிற அனுபவங்களில் எழுகிற தெளிவில் வருவது.


34. ஆடவர்

ஆடு என்றால் வெற்றி என்று பொருள். ஆடவர் என்றால் வெற்றியாளர் என்று பொருள். மனிதன் வெற்றியாளனாகத் தான் வாழ வேண்டும். விளங்க வேண்டும் என்பதுதான் பெரியோர்களின் பேரவா. வெற்றியாளனைத்தான் முழு மனிதன் என்றனர்.