பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காலத்தின் கோலம்தான் இப்படி நல்ல சொற்களை எல்லாம் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.


52. விந்தை உலகம்

வியப்பான உலகம், மர்மமான உலகம், புரியாத உலகம், பெருமையான உலகம் என்று உலகத்தைப் புகழ்ந்திட வருபவர்கள் எல்லோரும் விந்தை உலகம் என்றே கூறுவார்கள். அதிசயம் என்றும் புகழ்வார்கள்.

உலகின் சிறந்த அம்சம் எது? உருவாக்குவது. வாழ்க்கை தருவது, அழிந்து போகச் செய்வது, ஆக்கல், காத்தல், அழித்தல் இந்த மூன்றுக்கும் இயற்கையம்சமே தலையாய காரணம்.

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது என்பது உலகம் நிலைத்து நிற்க உதவுவது. உயிர்கள், மரங்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுபவைதான். வித்திலிருந்து மரங்கள். விந்திலிருந்து உயிர்கள். வித்தும், விந்துவும் உருவாக்கும் உயிர்த்தன்மை கொண்டவை.

விந்துவால் தான் மனிதகுலம் தோன்றுகிறது. தொடர்கிறது. விந்துவை முன்னிறுத்தியே மனித இனப் பரிமாணம் கொண்டு, பரம்பரை குணத்துடன் மிளிர்கிறது.

வியப்புக்கும், மர்மத்திற்கும் புரியாத குழப்பத்திற்கும், அதிசய ஆரவாரத்திற்கும் ஒரு பெயர் விந்து. அந்த விந்துவால் ஆக்கப்படுகின்ற, ஆகி வருகின்ற உலகத்தை அதனால்தான் விந்தை உலகம் என்று வாயார வாழ்த்தி வானளாவப் புகழ்கின்றார்கள் போலும்!