பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தலைவரிடம் தருமம் இருக்காது. நியாயம் நிலைக்காது. தடுமாற்றம் இல்லாத அதர்மம் நிறையவே இருக்கும்.

இப்படிப்பட்ட தலைவர்களிடம் துண்டர்களாக, தலையாட்டும் முண்டர்களாக, குண்டர்களாக, தொண்டர்களாக இருக்கும் வரை - தருமம் ஞாயம் எதையும் நினைத்துப் பார்க்காமல் நினைத்ததைச் செய்யலாம் அல்லவா?

பத்திரிக் கைகாரர்களும் தவறுகளைத் தான் தேடுகிறார்கள். துருவித்துருவி ஆராய்கிறார்கள். சமுதாய மக்களும் பேச்சு சுவாரஸ்யத்துக்காக தவறுகளைத்தானே எதிர்பார்க்கிறார்கள். பிறகு நல்லதுக்கு மரியாதை எப்படி கிடைக்கும்? மரியாதை இல்லாத தொழிலை மனிதன் செய்வானா?


67. வாழ்க்கை விளையாட்டு

‘உலகம்’ என்பது ஒரு ‘ஆடுகளம்’ அதில் உள்ள அத்தனை மக்களும் ‘வாழ்க்கை’ என்னும் ‘ஆட்டக்காரர்களே’. இயற்கை அமைத்துத் தந்துள்ள விதிகளின்படியே ‘இன்பம்’ என்னும் ‘இலக்கு’வை அடைவதே ‘வாழ்க்கை’ ஆட்டத்தின் நோக்கம். விளையாட்டில் தவறாக ஆடுபவர்கள் எவ்வாறு தண்டனை அடைகின்றார்களோ, அதேபோல், வாழ்க்கை ஆட்டத்திலும் தவறு இழைப்பவர்கள் தண்டனை பெறுகின்றார்கள்.

எனவே, உலகினில் விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றையொன்றைத் தழுவியே செல்கின்றன. விளையாட்டு என்ற துணையை வாழ்க்கையுடன்