பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

59


இணைத்துக் கொண்டவர்களுக்கு, உலகம் இனிமையாகத் தோன்றுகிறது. விளையாட்டை வேதனை என்று எண்ணி மயங்குகின்றவர்களுக்கு வாழ்க்கையும் அப்படித்தான் வழி காட்டுகிறது.


68. மூன்று வகையினர்

ஒரு டம்பளர் இருக்கிறது. அதில் பாதி அளவு பழச்சாறு இருக்கிறது.

ஆசையும், பேராசையும் படைத்தவன் ஒருவன் பார்க்கிறான். சே! அரை டம்பளர் காலியாக இருக்கிறதே! எப்படிக் குறைந்தது? யார் குடித்திருப்பார்? என்று பல கவலைகளுடன் குழம்பித் தவிக்கிறான்.

புத்திசாலி ஒருவன் டம்ளரைப் பார்க்கிறான். பரவாயில்லையே! பாதி டம்ளரில் பழச்சாறு இருக்கிறதே! என்று மகிழ்ச்சி அடைகிறான்.

உலகத்தைப் புரிந்து கொண்ட உண்மையான வாழ்வாளி பார்க்கிறான். டம்ளர் பெரிதாக இருக்கிறது. அதனால்தான் இப்படி தெரிகிறது. பழச்சாறு அதிகம்தான் என்று திருப்திப்படுகிறான்.

வாழ்க்கையைத் தாணாக்கி வீணாக்கிக் கொள்கிறவர்கள் முதலாவதாக உள்ளவர்கள். வாழ்க்கையை தேனாக்கி தேனமுதமாக்கிக் கொள்கிறவர்கள் இரண்டாவதாக உள்ளவர்கள். வாழ்க்கையைப் பரிபூரணமாக அனுபவித்து பெருமகிழ்ச்சி கொள்கிறவர்கள் மூன்றாவது வகை.

நீங்கள் எந்த வகையினர்?