பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இங்கே சோர்ந்து போன வயிறு, தொல்பை என்று அழைக்கப்படுகிறது. தோல்+பை என்பது தொற்பை என்று ஆகிறது. இந்த தொற்பை என்ற வார்த்தைதான் தொப்பை என்று ஆயிற்று. நல்பணி நற்பணி ஆனது போல, நல் சுகம் நற்சுகம் ஆனதுபோல, கல் பாறை கற்பாறை ஆனது போல, தோல் பையும் தோற்பை ஆகி தொப்பை ஆயிற்று.

சரிந்து போனது தோல்தானே தொப்பையும் தொல்லை தானே!

சரிந்து போனது சங்கடம் என்றால், தொப்பையும் தோல்பை தானே! புரிந்தால் சரிதான்.


87. மனுஷனும் மனிதனும்

சிந்திப்பதற்கு மன் என்று பெயர். சிந்திக்கும் பணியைச் செய்வதால் மனம் என்றாயிற்று. சிந்திக்கும் உயிரினத்திற்கு மனுஷன் என்று பெயர் வந்தது. சிந்திக்கும் பெண்ணைத்தான் மனுஷி என்றனர். சிந்தனை மட்டும் போதாது. அதை நிதம் செய்ய வேண்டும். அதுவும் அழகாக இருக்க வேண்டும். கவர்ச்சியாக இருக்க வேண்டும். மன்மதன் போல இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தான் மனிதன் என்று பெயரிட்டனர்.

மனிதன் என்ற சொல்லே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன், மதன், நிதன், மன்மதன், தமன் என்ற இத்தனைச் சொற்களும், மனிதன் என்ற சொல்லில் இருந்து தோன்றியவைகள் தான்.