கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவின் பிறந்த நாள் சென்னையில் முதன் முதலாக சக்தி காரியாலயத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்குப் பலரும் வந்திருந்தனர். புதுமைப்பித்தனும் வந்திருந்தார். கு. அழகிரிசாமியும் வந்திருந்தார் இருவருக்கும் அறிமுகம் இல்லை. அப்போது புதுமைப்பித்தனிடம் அழகிரிசாமியை அறிமுகப்படுத்த விரும்பிய நண்பர், அழகிரிசாமியைப் பக்கத்தில் அழைத்து புதுமைப்பித்தனிடம் சொன்னார்: “இவர் உங்கள் சிஷ்யர், உங்கள் எழுத்துக்களில் மிகப்பெரும் ஆர்வம் உடையவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்னும் ஆவலோடு இருந்தவர்...” உடனே புதுமைப்பித்தன் இடைமறித்து, “சிஷ்யன் என்று சொல்லாதீர்கள், சிஷ்யன் என்றால் மேல் மாடி காலி என்று அர்த்தம். ‘நண்பர்’ என்று சொல்லுங்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
வயதிலும் அறிவிலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களை, அவர் தமக்கு சமமானவர்களாகக் கருதுவதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.
(கு. அழகிரிசாமி சொல்லியது)
17