கார் வாங்கப்போவதாக கூறியது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே வெறுப்புடன், ‘வேஷ்டியை அவிழ்த்து தலைப்பாக் கட்டிவிடாதீர், என்றார்.
ஒரு பத்திரிகையில் அதன் ஆசிரியர், ‘காலத் தேவன் அடிச்சுவடு’ என்ற தலைப்புடன் ஒரு ஆராய்ச்சி விஷயத்தைத் தொடர்ந்து எழுதி வந்தார். அந்தக் கருத்துக்கள் புதுமைப்பித்தனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. விஷயம் ஒன்றிருக்க இவர் எதையோ ‘அடிச்சு விடுகிறார்’ அதற்கு நான் மறுப்பு எழுதப் போகிறேன். உன்னுடைய ‘முல்லை’யில், “காலத்தேவா அடிச்சு விடு” என்ற தலைப்புடன் என்னுடைய கட்டுரை வெளிவருவதாக விளம்பரப்படுத்திவிடு என்றார் புதுமைப்பித்தன். அவருடைய தலைப்பே அதற்கு மறுப்பாகவும் சவாலாகவும் அமைந்திருத்தது.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றியும் பதிப்பாளர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். புதுமைப்பித்தன். சின்னஞ் சிறு புத்தகங்களாக வெளியிடுவது புதுமைப்பித்தனுக்குப் பிடிப்பதில்லை அப்போது “கோவணம் கிழித்து விடுவது”-அது ரொம்ப சுலபமாயிருக்குமல்லவா? என்றார் புதுமைப்பித்தன்.
21
பு.-2