பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. ரா. வின் தொடர்பு கொண்டு, சென்னைக்கு வந்து மறுமலர்ச்சி எழுத்தாளர் குழுவில் ஐக்கியமானார்.

ராய. சொ. நடத்தி வந்த ‘ஊழியனி’ல் சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்தார். பின்னர் ‘தினமணி’யில் உதவி ஆசிரியர்; அதன் பிறகு ‘தினசரி’யில் உதவி ஆசிரியராக இருந்து ராஜினாமாச் செய்து வெளியேறினார்.

ஒரே மகள் மட்டும் அவருக்கு உண்டு. பெயர்; ‘தினகரி.’

சொ. வி. என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளையும், ‘புதுமைப்பித்தன்’ என்ற பெயரில் சிறு கதைகளையும், ‘ரசமட்டம்’ என்ற பெயரில் விமரிசனக் கட்டுரைகளையும், ‘வேளூர். வே. கந்த சாமிக் கவிராயர்’ என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வந்தார்.

காமவல்லி, ராஜமுக்தி, அவ்வை ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்.

1948-ம் வருடம் ஜூன் மாதம் 30-ம் தேதி புதுமைப்பித்தன் தமிழையும்-தமிழ் நாட்டையும் விட்டுப் பிரிந்தார்.

6