பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்நூலின் நோக்கம் - 1987ஆம் ஆண்டில் வெளிவந்த 'புதுமைப்பித்தன் படைப்புக்கள் - தொகுதி 1' (புதுமைப்பித்தன் கதைகளின் மொத்தத் தொகுப்பு) என்ற பெருநூலுக்கு, 'புதுமையும் பித்தமும்' என்ற தலைப்பில் : 62 பக்கங்களில் நீண்டதொரு முன்னுரை எழுதிய க.நா. சுப்பிரமணியம்அதில் பின்வருமாறு எழுதியுள்ளார். “தமிழில் சிறுகதை என்ற இலக்கியத்துறை வளர்வதற்குப் புதுமைப்பித்தன் தெரிந்து, அதிசயமாகவே செயல்பட்டிருக்கிறார், மணிக்கொடி காலத்தில் அந்தத்துறை வளம் பெற்று, தரம்பெற்று, உரம்பெற்று, உருவம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்...... அவர்களில் பலரையும் விட அதிகமான விஷயங்களை நேருக்குநேர் பார்த்து எழுதும் தெம்பு அவருக்கு இருந்தது. பரப்பினாலும் ஆழத்தினாலும் அவர் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் இன்றும் வாசகர்களின் கவனத்தைக் கவருவதாக இருக்கின்றன; புதுமை நிறைந்தவையாக இருக்கின்றன. பிரச்சார்கராக அல்லாமல், 'கலையை உய்விக்க - வந்தவன் அல்ல நான்' என்று அவரே சொன்னாலும், கலை உய்ய, இலக்கியம் ஓங்க வந்தவர்தான் அவர் என்பது நமக்கு நிதர்சனமாகத் தெரிகிறது” "புதுமைப்பித்தன் படைப்புகளில் புதுமை ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நிறைந்துதான் இருக்கிறது. பித்தமும் நிறைந்தேதான் இருக்கிறது. இரண்டுக்கும் அப்பால் இன்று தெரிந்து கொள்ளக்கூடிய, படித்த மாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கியத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த இலக்கியத் தன்மை பேராசிரியர்களோ, இலக்கண ஆசிரியர்களோ சொல்லுகிற அளவில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. . இது - இயற்கையாகவே புதுமைப்பித்தன் என்கிற சொ.விருத்தாசலத்தின் தனித்துவமாக அமைந்து - இன்றும் அவரைப்படிக்க நம்மைத் தூண்டுகிறது. அவர் எழுத்துக்களை மற்றவர் எழுத்துக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில் பலரும் எழுதினார்கள். சிலர் மிகவும் சிறப்பாகவும் எழுதினார்கள். அப்படிச் சிறப்பாக எழுதியவர்களில் முன்னணியில் நின்றவர் என்று புதுமைப்பித்தனைக் காலமும்