பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 புதுமைப்பித்தன் கதைகள் எழுதியிருக்கிறீரே' என்று அவர் புதுமைப்பித்தனின் ‘தழுவல் கதை' ஒன்றைக்கூடச் சான்றாக முன் வைத்ததில்லை. 'சொல்லிவைத்தால் கிடக்கிறது. - நம்புகிறவன். - நம்பிக் கொள்ளட்டுமே' என்ற தோரணையில்தான். அவர் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார். இவ்வாறு எழுதிவிட்டு, இதற்குச் சப்பைக்கட்டு கட்டுவது போல் தொடர்ந்து வேறொரு குரலில் பின்வருமாறு எழுதியுள்ளார்: ' 'ஆனால் தழுவல்காரர்களின் கற்பனை வறட்சியைப் போலப் புதுமைப்பித்தனுக்குக் கற்பனை வறட்சி இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிற ஒரு காரியம், கதை சொல்லும் மேன்மையும், சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கை வந்திருப்பது போலத் தமிழில் இந்த ஒரு நூற்றாண்டில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்று சந்தேகத்திற்கிட மில்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே அவர் கற்பனைத்திறனுக்கும் கதை சொல்லும் மேன்மைக்கும் சான்றுகள். ஆகையினால் அவர் செய்த சில தழுவல்களைச் சுட்டிக்காட்டி, அவரும், தழுவல்களால் மட்டும் பெயர் பெற்ற மற்றவர்களும் ஒன்றுதான் என்று சொல்லுகிற ஒரு கூட்டம் சமீப காலத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இந்தக் கூச்சல் விமர்சனமல்ல. இதற்கு அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை . தழுவல் தவிர வேறு எந்தவிதமான எழுத்தும், இல்லாதவர்களையும், புதுமைப்பித்தனையும் சமமாகக் காட்டுவது ‘விஷமமான' ஒரு முயற்சி', (அடிக்கோடிட்டது ரகுநாதன்) 'இந்தத் தழுவல் பழக்கம் அவரைக் கடைசிவரை விடவில்லை ' என்றும், 'தன் சொந்தக் கற்பனை ஓடாத சில சமயங்களில் சில கதைகளைப் பெயர் சொல்லாமலும் கூடத் தழுவி எழுதியதுண்டு' என்றும் முற்பகுதியில் எழுதிவிட்டு, தொடர்ந்து 'புதுமைப்பித்தனுக்குக் கற்பனை வறட்சி". இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிற ஒரு காரியம்' என்றும், 'சொந்தக் கற்பனை ஆட்சி, புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பதுபோலத் தமிழில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை ' என்றும் பிற்பகுதியில் க.நா.சு, எழுதியிருப்பது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாகத்தான் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். புதுமைப்பித்தனைத் தழுவல் இலக்கியக் கர்த்தா என்று முத்திரை ' குத்தும் 'கூட்டத்தின் கூச்சலை' 'விஷமத்தனமானது - ' என்று கூற முற்படும்