உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் க.நா.சு.வே.புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' கதையை லெவலின் போவிஸின் கதையின் தழுவல் என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டும் ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையை அடுத்துத் தாம் எழுதியுள்ள முன்னுரையில், இந்தக் குற்றச்சாட்டை மறைமுகமாக ஆதரிக்கும் விதத்தில், புதுமைப்பித்தன் லெவலின் போவிஸ் கதைகளைப் படித்திருந்தார் என்பதற்குச் சாட்சியம் கூறுகிறார். க.நா.சு.வின் மேற்கண்ட முன்னுரைப் பகுதிகளை அடுத்து வரும் பக்கங்களில், . அவர். புதுமைப்பித்தன் படித்து அனுபவித்த மேலைநாட்டு ஆசிரியர்கள், மற்றும் அவர்களது நூல்கள் பற்றித் தமக்குத் தெரிந்த விவரங்களைக் கூறும்போது, லெவலின் போவிஸின் ‘கருங்காலியும் தந்தமும்' (Ebony and lvory) என்ற நூலைப்பற்றி மட்டும் ஒரு பக்கம் எழுதியிருக்கிறார். அதில் இடம்பெற்ற சில வரிகள் வருமாறு. - லெவலின் போவிஸ் என்பவர் எழுதிய 'எபனி அண்ட் ஐவரி' என்கிற சிறுகதைத் தொகுப்பையும் விரும்பிப் படித்தார் சொ.வி. என்று எனக்குத் தெரியும், புதுமைப்பித்தனுடையதைப் போலவே கசப்புக் கலந்த ஒரு சிரிப்பு லெவலின் போவிஸினுடையது. ' '... புதுமைப்பித்தனே எழுதியிருக்கக்கூடிய கதைகள் என்று சொல்லக்கூடியவை பல வெலின் போவிஸின் எபனி அண்ட் ஐவரி என்ற நூலில் காணக்கிடைக்கின்றன.' (அடிக்கோடிட்டது ரகுநாதன்) இவ்வாறு ' எழுதுவ தன் மூலம் தேசிகன் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது போல், லெவலின் போவிஸின் கதையைத் தழுவியே புதுமைப்பித்தன் எழுதியிருக்கக்கூடும் என்ற கருத்தை வாசகர்களின் மனத்தில் க.நா.சு. விதைக்கவே முயன்றிருக்கிறார். இது விஷமத்தனம் இல்லையா? - இனி தேசிகன் குறிப்பிடும் லெவலின் போவிஸின் கதைதான் என்ன என்று பார்ப்போம். அவர் குறிப்பிடும் லெவலின் போவிஸின் கருங்காலியும் தந்தமும் {Ebony and ivory).என்ற - கதைத்தொகுதியை நானும் படித்திருக்கிறேன். ஆப்பிரிக்காவில் ஆட்டுப்பண்ணை , மாட்டுப் பண்ணை, காப்பித்தோட்டம் முதலிய உடைமைகளைக் கொண்டிருந்த மேலைநாட்டு - வெள்ளையர்கள் - அங்கு நடத்தி வந்த வாழ்க்கையையும், அவர்களால் சுரண்டப்பட்டும், சீரழிக்கப்பட்டும் வந்த கறுப்பர்களின் வாழ்க்கையையும் பற்றிக் கூறும் கதைகளே அவை. கருங்காலி என்பது கறுப்பர்களையும் தந்தம் என்பது