பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சொ.வி.யின்உரைநடை' - புதுமைப்பித்தனின் சிறுகதைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளதைப் . போலவே அந்தக் கதைகளை எழுத அவர் கையாண்ட தமிழ் வசன நடைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. . உண்மையில் அவர் தனது கதைகளுக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட உள்ளடக்கமே அவற்றின் உருவம், 'உரைநடை, உத்தி மாற்றத்தையும் தீர்மானித்தது எனலாம். அவரே தமது சிறு கதைத் தொகுதியொன்றின் முன்னுரையில், 'கருத்தின் வேகத்தையே பிரதானமாக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச்சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச் செல்லும் நடை ஒன்றை அமைத்துக் கொண்டேன். இது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை. தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது' - (ஆண்மை -முன்னுரை) என்று எழுதியுள்ளார். தாவித் தாவிச் செல்லும் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடை, சமுதாயப் புன்மைகளைச் சாடிய அவரது ஆரம்பகாலக்கதைகள்' பலவற்றுக்கு அபாரமாகக் கை கொடுத்து உதவியது. ' ' ' - உதாரணமாக, “கவந்தனும் காமனும்' கதையில் தெருமுனையில் அந்தப் பெண் நின்ற நிலையை, 'அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண். பதினாறு, பதினேழு வயது இருக்கும், காலணா அகலக் குங்குமப்பொட்டு மல்லிகைப்பூ, இன்னும் விளம்பரத்துக்குரிய சரக்குகள்' என்று அறிமுகப்படுத்திவிட்டு, 'நீங்கள போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட் உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான், ரொம்ப ஜம்பமாக, நாஸூக்காகக் கண்ணை மூட - வேண்டாம். எல்லாம், அந்த வயிற்றுக்காகத்தான்!' என்று அந்தப் பெண்ணின் அவலநிலைக்குக் காரணமான சமுதாயச் சுரண்ட்லை நறுக்குத் தெறித்தாற்போல் அவர் சாடிவிடுகிறார். இவ்வாறு ஓரிரு வார்த்தைகளைப் பிரயோகம் செய்து உள்ளத்தில் - ஊசி, தைத்தது போல் சில உண்மைகளை உணர்த்திவிடுவது புதுமைப்பித்தனுக்குக் கை வந்த கலையாக இருந்தது. 'ஆண்மை ' - கதையில் பால்யமணத்தின் கொடுமையைக் குறிக்கும் விதத்தில்,