உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

. பிரம்ம ராக்ஷஸ் 109 ஒரு நாள், அந்தி மயங்கும் சமயம், குறிஞ்சிப்பாடி இருவரை இழந்தது. காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒருமுறை பழையபடி நடித்தது. நன்னய பட்டன் திசையறியாமல் சென்றான். பசியறி யாமற் சென்றான். கைக்குழந்தையின் - மூன்று வயதுக் குழந்தையின் - சிறு தேவைகள், அவனுக்குப் பூத உடம் பின் தேவைகளை இடித்துக் கூறும் அளவுகோலாயின. அதன் பசியைச் சாந்தி செய்யும் பொறுப்பு இல்லாவிட் டால், அவனிடம் பசியின் ஆதிக்கம் தலைகாட்டி யிராது. அவன் அன்று ஆசைப்பட்டது எல்லாம் மரணத்தி னின்றும் தப்புவதற்கு வழி. - ஏன் மரணத்தினின்றும் தப்ப வேண்டுமென்று அவ னிடம் யாராவது கேட்டிருந்தால், அவனால் காரணம் கூறி யிருக்க முடியாது. ஆனால், பயம் என்று ஒப்புக்கொண் வெல்வதே - காலத்தின் டிருக்கமாட்டான். மரணத்தை போக்கைத் தடை செய்வதே -- ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை! மரணம் என்பது இல்லா விடில் நரகம் என்பது எப்படித் தெரியும்? அப்பொழுது அவனது சிறு மனம், குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் என்ற அறிவு கெட்ட ஆசையால் கட்டுண்டது. இருண்டு நெடு நேரமாகியும் நடந்துகொண்டே யிருந் தான். கையில் குழந்தை, ஆசையற்று,ஆனால் ஆசையின் வித்துக்களான தேவையில் மட்டும் நிலைக்கும் மன நிலையில் கட்டுண்டு,நித்தியத்துவத்திற்கும், மரணப் பாதையின் சுழ லுக்கும் மத்தியிலுள்ள பிளவுக் கோட்டின் எல்லை வெளி யான இடைவெளியில் நின்று உறங்கியது. குறிஞ்சிப்பாடியின் வேதம் பொய்யாகும் நிலையை கன்னயபட்டன் நிதரிசனமாகக் கண்டான். நெடுநேரம் நடந்த களைப்பு. இருளின் கருவைப் போன்ற ஒரு குகை வாயிலில் சிறிது உட்கார வைத்தது.