உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

110 புதுமைப்பித்தன் கதைகள் உறக்கத்தை அறியாத கண்கள் குகைக்குள் துருவின. அந்தக் குகைதான் பிரம்ம ராக்ஷஸாகத் தவிக்கும் ஒரு பழைய மனிதனுடைய ஆசையின் பயங்கரமான பலி பீடம். வெகு காலமாக அப்பாதையிலே யாரும் வரவில்லை. மனித தைரியத்தின் உச்ச ஸ்தானமாக இருந்த அந்தக் குகையின் வாசலில், நன்னய பட்டன் உட்கார்ந்ததும், குழந்தை வீரிட்டு அலறத் தொடங்கியது. குழந்தையைத் தேற்றிப் பார்த்தான்: எவ்வளவோ தந்திரங்களைச் செய்து பார்த்தான். குழந்தையின் அலறல் நிற்கவில்லை. . து அதைத் தோளில் சாத்திக்கொண்டு. முதுகைத் தட்டிக்கொடுத்த வண்ணம் எழுந்து உலாவி அங்குமிங்கு மாக நடக்கத் தொடங்கினான்.குகையின் வாசலை விட்டு அகன்று செல்லும்பொழுது, குழந்தையின் அழுகை படிப் படியாக ஓய்ந்தது. ஆனால்,திரும்பிக் குகையை அணுகி யதுதான் தாமதம்; குழந்தையின் குரல் உச்ச ஸ்தாயியை எட்டியது. இரண்டு மூன்று முறை இப்படிப் பரீட்சித்த பிறகு, இந்த அதிசயமான செயல், குகையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அவனுள் ஆசையை எழுப்பியது. மரத்தடியில் சற்று நேரம் இருந்து குழந்தையை உறங்க வைத்துவிட்டு, எழுந்து குகையை நோக்கி நடக்க லானான். காற்றற்று, அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே, ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது. சற்று நின்று, சுற்றுமுற்றும் கவனித்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்? குகை வாயிலின் பக்கம் போனதும், தேக மாத்யந்த மும் காரணமற்றுக் குலுங்கியது. மயிர்க்கால்கள் திடீ ரென்று குளிர்ந்த காற்றை ஏற்றதுபோல் விரைத்து நின்றன. நன்னய பட்டன் உள்ளத்தில்,இயற்கைக்கு மாறான் இக்குறிகளினால் ஆச்சரியம் தோன்றியது.