உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

ஞானக் குகை 143 குழந்தையைச் சுற்றிலும் ஒரு தேஜஸ் ஒளிவிட ஆரம்பித்தது. அதற்குப் புதிய விஷயங்கள் தென்பட லாயின். எங்கு பார்த்தாலும் செங்குத்தாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் கிடக்கும் மணிகள், பாறைகள்! அதில் தங்கங்களும் வெள்ளியும் கொடி போலப் படர்ந்து மூடிக் கிடக்கின்றன. பவழத்தாலும் தங்கத்தாலும் கிளைகள் கொண்டு, வைரங்களாக மலரும் ஓர் அற்புதப் பூங்கா வனம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு லோகம். அதன் மலர் அல்லது கனி பல வர்ணங்களில் பிரகாசிக்கும் வைர வைடூரியங்கள். கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாகசர்ப்பங்கள், கண்ணாடிகள் போல் பிரகாசிக்கும் மேல் தோலையுடைய பிரமாண்டமான விரியன்கள், விஷப்புகை யைக் கக்கிக்கொண்டு திமிர்பிடித்தவை போல் சாவதான மாக நெளிகின்றன. பல பல வகையில் ஒளி விட்டுக் கண்களைப் பறிக்கும் மணலில் அங்கங்கே அங்கங்கே உலகத்து ஜீவராசிகளின் எலும்புக் கூடுகள் பாதி புதையுண்டு கிடக்கின்றன. குழந்தையை அழைத்து வந்த சித்தரின் பிரதிபிம்பங்கள் போல் அச்சு அசல் மாறாத உருவங்கள் ஒவ்வொரு மரத் தடியிலும் நிஷ்டையில் ஆழ்ந்து சலனமற்றிருக்கின்றன. அந்த இயற்கைக்கு விரோதமான உலகத்திலே, சுவையை யும் பரிமளத்தையும் பெற்ற காற்று, உணவாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது. "தேவியைப் பார்!" என்று இடி முழக்கமான குரல் ஒன்று கேட்டது. உடனே அந்தப் புதிய உலகம் மறைந்தது. பழைய இருட்டில், அந்தப் பாறைச் சுவரின் முகட் டில், ஒரு கன்னக் கனிந்த இருள் உருவம். அந்த இருளுக்கே ஒரு பிரகாசம் உண்டு போலும்! அவள்தான் தேவி! பிறந்த கோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னி உருவம்! .