உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

சிற்பியின் நரகம் 49 மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி! திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக் கனிந்த இருள்! ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு! பிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில்! கண்கள் கூசும்படியான பிரகாசம்!...கதவுகள் மணியோசையுடன் திறக்கின்றன...... உள்ளே அந்தப் பழைய இருள்! தாமே சாத்தன் உள்ளே செல்லுகிறான், இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்று கிறது! என்ன! இதுவா பழைய சிலை! உயிரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகை யில்லையே!..... எல்லாம் மருள் ...LAST! அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன. "எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!" என் என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக் கணக்கான சாயைகளின் கூட்டத்தில், ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்க. வில்லை! இப்படியே தினமும் நாட்கள். வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன - அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே! - "எனக்கு மோட்சம்..." இதுதான் பல்லவி, பாட்டு எல்லாம்/ சாத்தன் நிற்கிறான். எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து!..." இடி இடித்த மாதிரி, சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங் நீ