உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

விநாயக சதுர்த்தி 89 திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப் பாதைதான்... "இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக் கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொது உடங்காடு

"அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக்குடுமியும் பூணூலும் இருந்தாலும், முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக்காலமா பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியா பிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக, ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா. சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே அப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி. ஆனால், நாலு காரியம் உருப்படியாய்ப் பண்ணத் தெரியாதுஎப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும், 'அடியாத மாடு படியாது' என்பது வேளா ரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும் படி நடந்துகொண்டான் என்றால், பயல் எவ்வளவு துடி யாக இருந்திருக்கவேண்டும்! று . "சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளை யாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந் தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார்.

உடை மரம் - கருவேல மரம்.