பலமாக 'ஹார்ண்' அடித்துக்கொண்டு வெளிவாசலை நெருங்குகிறார். குழந்தை விழித்துக்கொண்டு, கொட்டாவி விட்டபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு நிற்கிறது.
சுந்தரவடிவேலு காரை நிறுத்தி இறங்கி குழந்தை, 'குழந்தையின் பரிவாரம்' சகலத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு வண்டியை உள்ளே திருப்பிக்கொண்டு வீட்டுக்குச் செல்லுகிறார்.
வீண் முரண்டால் மனக்கசப்பைத் தவிர ஆகிற காரியம் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த மரகதம், அன்று தலையை ஒழுங்காகச் சீவி முடித்துக்கொண்டு, சாயங்காலக் காப்பி எல்லாம் தயாரித்து வைத்துவிட்டு, வெளியே கார் வரும் சப்தத்தைக் கேட்டு நடுக் கூடத்திற்கு வரும்போது வெளியிலிருந்து, "சித்தியைக் கூப்பிட்டு காப்பியை இங்கே கொண்டாரச் சொல்லுவோம். மரகதம்! மரகதம்" எனக் கூப்பிடும் குரல் கேட்கிறது.
"வாண்டாம் அப்பா,நாம் போயி வெளையாடுவோம்" என்கிற குழந்தையின் குரலும் கேட்கிறது.
சுந்தரவடிவேலு விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தம்....
"சித்தி நல்லவள்ளா - அண்ணெக்கேதான் பூனெய அடிச்சு வெரட்டியாச்சே" என்கிறார்.
"பூனைக்கில்லெப்பா..." என்கிறது குழந்தை.
இவ்வளவையும் கேட்டுக்கொண்டே காப்பி பலகாரங்களுடன் வெளியே வருகிறாள் மரகதம். அவள் முகத்தில் நாணம், வருத்தம் இரண்டும் கலந்திருந்தும் ஒரு மலர்ச்சியும் புன்சிரிப்பும் இருக்கிறது.
"ஏதேது" எனத் தமது 'வேலையில்' பாதி முடிந்துவிட்டதை உணர்ந்துகொண்ட சுந்தரவடிவேலு, "இந்தா நான் நாக்காலியே எடுத்துப் போடுறேன்; இந்தச் சட்டையெல்லாம் போட்டுகிட்டு வா" என தன் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறார்.
பக்ஷணத் தட்டை ஒரு மேஜை மேல் வைத்துவிட்டு கோட்டை வாங்கிக்கொண்டு உள்ளே செல்லுகிறாள் மரகதம்.
தகப்பனாரும் குழந்தையுமாக. நாற்காலிகளை இழுத்துப் போடுகிறார்கள்.
"குஞ்சு, குஞ்சு, நீ கொஞ்சம் சும்மா இரு, நானே போடுகிறேன்."
"ஒனக்குத் தெரியாதப்பா..." என்று ஒரு நாற்காலியை முக்கி முனகி இழுக்கிறது.
மரகத்ம் திரும்பி வருகிறாள்.
மத்தியில் மேஜையை வைத்து அதில் பலகாரங்களை வைக்கிறாள். ஒரு புறம் குழந்தையையும், மறுபுறம் மரகதமுமாக உட்காருகிறார்கள்....
"என்ன மரகதம், நீயும் என்ன சிறுபிள்ளைத்தனமா அண்ணக்கி நடந்துக்கிட்டே அவ 'அக்கா' என்று சொல்லிட்டா குத்தமென்ன;
புதுமைப்பித்தன் கதைகள்
713