உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நான் அப்பவே சாப்பிட்டேனே, அம்மா குடுத்தாளே" என்கிறது குழந்தை - மரகதத்தை முதல் முறையாக அம்மா என்று அழைக்கிறது.

"நீ மடிலே படுத்துக்கோ!.. கொஞ்சம் படிக்கிறேன்..." என புஸ்தகத்தில் மன உளைச்சலை மறக்க முயற்சிக்கிறார்.

குழந்தை சிறிது நேரத்தில் அயர்ந்துவிடுகிறது.

மரகதம் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வருகிறாள்.

அவள் தலை குனிந்து மனம் நிலைகுலைந்து கிடப்பதைக் காட்டுகிறது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் கூசி காலடியில் வந்து உட்காருகிறாள். பேச வாயெழவில்லை. கைவிரல் நகத்தால் தரையைக் கீறிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலிருந்து நீர்ச் சொட்டு தரையில் விழுந்து அவள் நகத்தையும் நனைக்கிறது.

சுந்தரவடிவேலு மெதுவாக அவள் தலையைத் தடவுகிறார்.

"குஞ்சு தூங்கிவிட்டாள், நாற்காலியில் படுக்க வைக்கிறேன் ..." என்று எழுகிறார்.

"நானே படுக்க வைக்கிறேனே" எனக் குழந்தையை வாங்கி பக்கத்து சோபாவில் கிடத்தி தட்டிக்கொடுத்துவிட்டு மறுபடியும் வந்து உட்காருகிறாள்.

"எண்ணைக்குமே எனக்கு கோபம் வராதே...ஏன் அப்படி வந்தது தெரியுமா?..." என ஒரு கைத்துப்போன புன்சிரிப்புடன் கேட்கிறார்.

பதிலை எதிர்பார்க்காதவர் போல, "நேத்து வந்தானே அந்த டாக்டருக்குத்தான் குஞ்சுவோட அம்மாவுக்கும் அவன்தான் பார்த்தான்... அப்பொ எங்கிட்ட அவ்வளவு ஜாஸ்தியாகக் கிடையாது ... சினேகிதத்துக்காக எவ்வளவோ செஞ்சான் ... இப்பொ ஒரு கஷ்டம் அவனுக்கு வந்தது... வேலையே போயிடும்... அதுக்காக நான் நம்மாலானதைச் செய்யத்தான் ஆசைப்பட்டேன்... அவனுக்காகத்தான்... நீ மறந்துபோனேன்னதும் அதனாலேதான் அவ்வளவு கோபம் வந்தது... என்று சொல்லிவிட்டு... சிறிது நேரம் கழித்து, "எல்லாம் விதி" என்கிறார்.

"விதியா எங்க குடும்பப் பாவம் நாஞ் செய்த வெனே... எங்கம்மா பாவத்தை என் தலையிலே வச்சிட்டுப் போயிட்டா.. எங்கப்பாவுக்கு எங்கம்மா இரண்டாந்தாரமில்ல. முதல் தாரத்துக்காரிக்கு ஒரு அண்ணா இருந்தான். அவனுக்குப் பதினாலு வயசு இருக்கும். வயத்துவலின்னு பளெயது சாப்பிட மாட்டான், பள்ளிக் கூடம் போகமாட்டேன்னான். அம்மெ போய் அப்பாகிட்ட சொன்னா... அப்பாவுக்கு கோவமா வந்திட்டுது. அவனைத் தூணொடே கெட்டி வச்சு உதைத்து அவுத்து விடாதே சோறு போடாதேன்னு. மத்தியானமா அவன் கத்துக்கத்துன்னு கத்தினான்.

738

சிற்றன்னை