உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவுத்தே விடலே - அவ்வளவுதான்; செத்தே போனான். தூண் வெடிச்சுப் போயிருந்த பொந்திலே ஒரு பாம்பு இருந்து கடிச்சுப்புட்டுது... சாயங்காலமா அவுத்து விடரப்ப பொணமாத்தான் இருந்தான் - அந்தப் பாவந்தான் ...."

இவ்வாறு நிலைகுலைந்த இரு மனங்களும் காரண காரியத் தொடர்பு கண்டுபிடிக்க முயன்றுகொண்டு குழம்பின....

வெளியிலே வழிப்போகும் பிச்சைக்காரன் "உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்" என்ற பொருள்கொண்ட பாட்டை உச்சஸ்தாயியில் கர்ணகடூரமான குரலில் பாடுகிறான்.

புதுமைப்பித்தன் கதைகள்

739