உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னை இட்ட தீ

முற்றுப்பெறாத நாவல்

புராண இதிகாச காலங்களிலெல்லாம் பல விவகாரங்கள் ரொம்பவும் சுளுவு. எந்தச் சமயத்தில் யார் கட்சியில் சேர்ந்தால் நமக்கு கவலை இல்லை என்னும் யோசனை செய்யவேண்டிய கவலையே கிடையாது. சண்டையோ, போராட்டமோ அல்லது இவ்விரண்டையும்விட சூட்சுமமான மனோசாகர கொந்தளிப்புகளோ - எவையானாலும் அதில் ஒரு கட்சிக்கு தீமை என்று பெயர். அது தோற்கடிக்கப்படும். தர்மம் ஸ்தாபிதமாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் லௌகீக, ஆத்மார்த்த தொந்திரவுகள் சற்றுமே கிடையாது. தர்மோத்தாரணத்துக்காக எவனோ ஒருவன் பிறப்பிக்கப்படுவான். நிச்சயமாக அவன் முதுகில் அந்தச் சுமை ஏற்றப்படும். மேலும் அவனை அடையாளம் கண்டுகொள்ளுவதும் லேசு. சகலசம்பன்னனாக, முப்பத்திரெண்டு சாமுத்திரிகா லக்ஷணங்களும் பொருந்தி, வலிமையின் ஹிமாசலமாகவும், சிந்தனைச் சூரியனாகவும் இருப்பான். சந்திர குலத்தில் உதிப்பான் அல்லது சாட்சாத் பிரம தேவனது நெற்றியிலிருந்து பிறப்பான்.

இவனையும் இவனைப் போன்றவர்களுடனுமே கிரந்தவுலகில் பழகிப் பழகி, மண்ணின் நெடியும் வாழ்வின் முடை நாற்றமும் படாதவர்களுக்கும், பிறருடைய பூஜர் வைராக்கியத்தாலோ, க்ஷண சபலத்தாலோ இவ்வுலகில் உந்தித் தள்ளப்பட்டு, பொறுப்பை முதுகில் ஏற்றி, தான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள விரும்பாத நியதிகளுக்கு உடம்பட்டு, வாழ்வு எனவும் விதி எனவும் சமாதானப் பட்டு இற்றுப் போனவர்களுக்கும் இந்த நன்மை - தீமை துவந்த யுத்தத்தின் நெளிவு சுளுவு லேசாகப் பிடிபடுவதில்லை. சத்த சாக்ரத்தையும் உழக்கு வைத்து அளக்கப் புறப்பட்ட கதையாக, புவன ரகசியங்களை நேரடி அனுபவத்தாலேயே ஒப்புக்கொள்ள விரும்புகிறவர்கள் வாழ்வு என்பது பெருக்கல் வாய்ப்பாடின் நியதியைத்தான் கடைப்பிடிக்கிறது என்ற ஆதாரத்தில் சோதனைத் தேட்டத்தில் முற்பட்டு, அப்படியல்ல என்பதை கண்டுபிடிக்க ஆயுள் முழுவதையும்

740

அன்னை இட்ட தீ