உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நடுத்தெருவில் நின்று எப்படிச் சொல்லுவது தாருசாவுக்கு வாருங்க" என்றான்.

இதென்ன ரகசியமோ என மனம் துழாவி ஊசலாட அவனை அழைத்துக்கொண்டு முடுக்கு வழியாக, வளைவுக்குள் சென்று, நடையில் நின்றபடி, "ஏளா, பட்டாலை விளக்கைத் தூண்டு" என்று உத்தரவிட்டார்.

"இங்களை யாருமில்லையெ. நீ சொல்லுவதைச் சொல்லேன்" என்று குறவனிடம் கேட்டார்.

குறவன் மடியிலிருந்து இரண்டு உலோகக் கட்டிகளை எடுத்துக் கொடுத்து, "இதைக் குத்துவிளக்கருகில் கொண்டு வைத்துப் பார்த்து விட்டு வாருங்கள்" என்று சொன்னான்.

பிள்ளையவர்கள் அவை இரண்டையும் கொண்டு விளக்கருகில் பார்த்தார். துல்லிய மஞ்சள் வர்ணத்துடன் பளபளவென்று மின்னியது. தங்கம்! தங்கம் என்ற நினைப்பு தட்டியதுமே அவருக்குக் கை வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தது.

திரும்பி நடைவாசலுக்கு ஓடோடியும் வந்து, "தங்கமில்லா" என்று அடித் தொண்டையில் கேட்டார்.

"ஆமாம் ஐயா! தங்கந்தான். நல்ல சொக்கத் தங்கம். எனக்கு ரசவாதம் கொஞ்சம் பொளக்கமுண்டும்; செம்பை, ஒரு மூலிகையை வச்சு பொடம் போட்டா தங்கமாயிரும்; நீங்க கேள்விப்பட்ட தில்லியோ?" என்றான்.

பிள்ளையவர்கள் தலையசைக்க, தான் வந்த காரியம் அவருக்கு தங்கம் செய்து கொடுப்பதற்காகவே எனவும், நல்ல பெரிய செப்புப் பாத்திரமும் ரூபா நூறும் கொடுத்தால் நாளைக்கு இதே நேரத்தில் பாத்திரத்தை உருக்கி எடைக்கு எடை தங்கமாகத் திருப்பித் தருவதாகச் சொன்னான்.

பணம் சம்பாதிக்க சுருக்கமான வழி கிடைத்தால் யார்தான் அதன் மோகவலையில் விழாமலிருப்பார்கள். பிள்ளையவர்கள் உள்ளே சென்று தங்கப் பாளங்களைக் காட்டி குசுகுசுவென்று ஓதினார். அம்மையாருக்கு உடல் பூரித்து போய்விட்டது. கையில் ரொக்க மில்லாததினால் கட்டைக் காப்பைக் கழற்றிக் கொடுத்து, குறவனை எப்படியும் சம்மதிக்கச் செய்ய வேண்டும்'என சொல்லி, குடிதண்ணீர் ஊற்றி வைத்திருந்த தாமிரவருணித் தண்ணீரை சாக்கடையில் கொட்டிவிட்டு பாத்திரத்தைக் கொடுத்துவிட்டாள்.

குறவன், பாத்திரத்தின் எடைக்கு, கையில் கொடுத்த தங்கம் போதாது; செலவு ஜாஸ்தி என்று பிகுப் பண்ணினான். எப்படியாவது செய்துகொண்டு வந்து விடு, பிறகு சன்மானம் செய்கிறேன் என்றார் பிள்ளை.

குறவனிடம், அவன் கொடுத்த தங்கப் பாளத்தையும் நீட்டினார் பிள்ளை. "என்னை நீங்கள் எப்படி நம்புவது; அது இருக்கட்டும்; நாளைக்கு இந்த நேரத்துக்கு இங்கே வரும்போது வாங்கிக் கொள்ளு-

766

அன்னை இட்ட தீ