"ஏ,ஐயா, நீயுமா பேசாம வந்திட்டே" என்றாள் தாயார்.
"போரப்ப நீ சொல்லி விட்டியா?" என்று அதிகாரம் பண்ணினான் பால்வண்ணன்.
"அதுவும் சரிதான்; என்ன மேயப்போற மாட்டுக்கு கொம்பிலியா புல்லெக் கட்டி அனுப்புவாக, வண்டியை அவுக்காம திருப்பியடிச்சிக்கிட்டுப் போயி, அவுகளை அளச்சிக்கிட்டுவா, நல்லாத்தான் காரியமா இருக்கு" என்றாள் தாயார்.
"நான் காப்பி சாப்பிட்டுப் போட்டுத்தான் போவேன்" என்றான் பால்வண்ணன்.
"போன எடத்திலே புத்தியா காரியம் நடத்தத் தெரியாமெ தடி மாதிரி வந்திருக்கே, ஒனக்கு வாரியக் கொண்டைக்கு காப்பி வேற கேடா; வண்டியே அப்படியே திருப்பி அடிச்சிக்கிட்டுப் போயி அவுகளைக் கூட்டிக்கிட்டு வா" என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
"அத்தே, அத்தே வந்த காலோடே அவுகளைக் கோவியாதிய; ஒரு நொடியிலே காப்பியைப் போட்டுக் குடுத்துப்புடறேன்" என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்தாள் சித்திரை.
"நீயுமாச்சு, உன் புருசனுமாச்சு! எப்பிடித்தான் குடும்பத்தை கட்டிக் கொண்டாரப் போறியளோ; அவன்தான் வாயிலெ மண்ணெ வச்சிக கிட்டிருந்தான் என்றால் உனக்கெங்கே மதி போச்சு?" என்றாள் மாமியார்.
மதில் எட்டி நின்ற சாலாச்சி ஆச்சி, "ஒன் மகன் கெட்டிக்காரத்தனத்துக்கு, அவளையேன் பேசுதே; அவ எப்பிடிக் கூப்பிடுவா?" என்றாள்.
இப்படியாக விவகாரம் ஓய்ந்தது. அன்று மாலை பொழுது சாய்ந்து சுமார் ஒன்றரை நாழிகை கழித்து, அசைந்தாடும் பெருமாள் பிள்ளை தம்முடைய மருமகனுடன் மறுகால்மங்கலத்தில் வந்து குடியேறினார். அவருடன் வந்த சாமான்கள் வெகு சொற்பம். மாற்று வேட்டிகள் ஒரு ஜோடி; திருவாசகம் ஒரு பிரதி; ஒரு சம்புடம் திருச்செந்தூர் இலை விபூதி; நிலைகெட்டுக் குழம்பும் மனம்.
சித்திரை வளைவில் உள்ள ஒரு வீட்டைப் பெருக்கி மெழுகி, அங்கு ஒரு குத்துவிளக்கும் ஏற்றிவைத்து தகப்பனாருக்கு இடவசதி செய்து வைத்திருந்தாள். வந்தவர்களுக்கு வென்னீர் கொடுத்து, கால் முகம் சுத்தி செய்துகொள்ளச் சொன்னாள்.
தகப்பனாரை பார்த்ததும் தாயாரின் ஞாபகம் வர கண் கலங்கியது சித்திரைக்கு அசைந்தாடும் பெருமாள் பிள்ளைக்கு தமது மனைவியின் இருபத்தியைந்து வருஷ பணிவிடை நினைவில் நின்றது. கண்
770
அன்னை இட்ட தீ