உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'எனக்கு மோட்சம்!' 'எனக்கு மோட்சம்!' என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

இப்படியே தினமும்....

இந்தக் கதையில் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்துச் சூழ்நிலையை நாம் நன்குணர்கிறோம். துறைமுகத்தில் கடலொலியைப் பரிகசிக்கிற பல தேசத்து வியாபாரிகளின் ஆரவாரம் இன்னும் நம் செவியில் ஒலிக்கிறது.

சூழ்நிலையைச் சரிவரக் கதைகளில் கொண்டுவருகிற ஆற்றல் ஆசிரியருக்கு இருக்கிறது. பல இடங்களில் திருநெல்வேலி வேளாளர் வாழ்க்கைச் சித்திரம் அவர்களுடைய நடையுடை பாவனைகளோடு அப்படியே பிரத்தி யட்சமாகிறது. சிறுகதை உலகத்தில் இவர் தகுதியான ஓர் இடம் பெறுவதற்கு 'நினைவுப் பாதை' ஒன்று போதும். வைரவன் பிள்ளை மனைவி வள்ளியம்மை ஆச்சி இறந்துவிடுகிறாள். இரண்டாம் நாள் கிரியை. இன்னும் விடியவில்லை. காலப் பனிமூட்டத்தைத் தாண்டி வைரவன் பிள்ளை மனம் ஒரு கனவு உலகத்தில் திரிகிறது. மணக்கோல் வள்ளியம்மை அவர்முன் நிற்கிறாள். கிரியைச் சங்கு ஊதப்படுகிறது. கனவு கலைகிறது. முன்போலப் பாழ் உலகந்தான்... கதையில் சங்கைக் கொண்டுவருவது ஆசிரியருடைய சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. வெறும் சங்கின் முழக்கமென்று நீங்கள் இதைக் கருத வேண்டாம். இன்பக் கனவு உலகத்தில் திரியும் மாந்தர்களைப் பயங்கரமான பிரத்தியட்சத்திற்குத் திருப்புகிற உலகத்தின் இரக்கமற்ற ஒலிதான் அது.

'துன்பக் கேணி' ஒரு குறுநாவல் திட்டத்திற்கு வளர்ந்துபோனாலும் அதில் ஒருமை நிற்கிறது. எல்லா நிகழ்ச்சிகளும் சோகப் பூச்சைப் பூசிக் கொண்டு தோன்றுகின்றன.

இக்கதையைப் படிக்கும்பொழுது லவலின் போவிஸ் (Llewelyn Powys) எழுதிய 'கருங்காலியும் தந்த'மும் (Ebony and Ivory) என்ற புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி என் ஞாபகத்திற்கு வருகிறது. கறுப்புக்கு வெள்ளை தந்தது பரங்கிப் புண்தான். அவன் தந்தான் அவன் வாங்கிக்கொண்டான் என்று போவிஸ் கதையை முடிக்கிறார். இந்த முறையில்தான் 'துன்பக் கேணியும் செல்லுகிறது.

மனக்குகை ஓவியங்க'ளில் காணப்படுகிற சித்திரங்கள் ஆசிரியரின் மனக்குகைச் சுவர்களில் வரையப்பட்ட சித்திரங்களென்றே நான் சொல்லுவேன். மனத் தடுமாற்றம், சர்ச்சைகள், பாரமார்த்திக விஷயத்தில் சூனியம், வாழ்வில் நம்பிக்கை-வரட்சி இவைகளைத்தான், சித்திரங்கள் காண்பிக்கின்றன.

சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது தெரியுமா?....துன்பம், நம்பிக்கை - வரட்சி, முடிவற்ற சோகம்...

'புதுமைப்பித்தன்' நடையிலே ஆங்கில இலக்கியத்தில் காணப்படும் சொல்லடுக்குகள், உருவகங்கள், வாக்கிய ரசனை தென்பட்டாலும் அந்த

790

பின்னிணைப்புகள்