உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மணிக்கொடியை பதிப்பாசிரியர் நேரிடையாகப் பார்க்கவில்லை. வெளியீட்டு விவரங்களும்,கொள்ளப்பட்ட பாடமும் முறையே எம். வேதசகாயகுமார் தம் நூலின் அட்டவணையிலும், கொல்லிப்பாவையிலும் வழங்கியவாறு தரப்பட்டுள்ளன. ப. 166 'அவன் குறைகள் அவளையறியாமலே ...' என்று தொடரும் வாக்கியத்தில் 'குறைகள்' என்ற சொல் பொருள் தரவில்லை மணிக்கொடி வார இதழ் 9.9934க்கு அடுத்து 16.9.1934இல் வந்துள்ளது. எனவே, 15.9.1934 என்ற தகவல் பிழையானது.

29. புதிய ஒளி

முதல் வெளியீடு மணிக்கொடி, 16.9.1934 (மூலபாடம்)
புனைபெயர் : கூத்தன்
நூல் : புதிய ஒளி

30. களவுப் பெண்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 16.9.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்]
பாடவேறுபாடு;

(1) மணிக்கொடியில் மன்னன் பெயர் 'ராஜ ராஜன்', 'ராஜ ராஜ சோழன்', 'ராஜ ராஜ வர்மன்' என வேறுவேறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(2) ப. 169. 3ஆம் பத்தி "அதெல்லாம் பழைய கதை; ராஜ ராஜன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல இருக்கும் என்று கண்டானா? கம்பன் பாட்டிலே, கம்பன் கண்ட கனவிலே பெரிய கனவுகளைச் சமைத்தான்..." என்று அமைந்துள்ளது.

31. 'நானே கொன்றேன்!'

முதல் வெளியீடு : ஊழியன், 21.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: மாத்ரு

'மாத்ரு' என்ற பெயரில் ஊழியனில் (12.10.1934) வெளியான 'கதைகள்' என்ற கட்டுரை புதுமைப்பித்தன் கட்டுரைகள் (ஸ்டார் பிரசுரம், 1954) நூலில் 'சிறுகதை 3' என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் புதுமைப்பித்தன் மறைந்த பிறகு தொகுக்கப்பட்ட நூலாயினும், இது அவருடைய கட்டுரைதான் என்பதை இனங்காட்டும் சில தொடர்கள் - முக்கியமாகச் சிறுகதையை வாழ்க்கையின் சாளரமாகக் காணும் உருவகம் புதுமைப்பித்தனின் பிற படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. 'மாத்ரு' என்ற இதே புனைபெயரில் இந்தக் கதை ஊழியன் (21.9.1934) இதழில் அதாவது 'கதைகள்' கட்டுரை வெளிவருவதற்கு முன்பே- வெளிவந்துள்ளது; எனவே, இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

32. சாயங்கால மயக்கம்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 23. 9. 1934
புனைபெயர் : புதுமைப்பித்தன
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) ப. 181, 9ஆம் பத்திக்கு பிறகு,

புதுமைப்பித்தன் கதைகள்

803