பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பமும், குழந்தையும் 101 ஒருவர் சொன்னார், மற்ற நாட்டு எழுத்தாளர்களின் நிலை எப்படியோ? ஆனால் நமது அருமைத் தமிழ் நாட்டு எழுத் தாளனை மணந்து கொள்ளும் மகராசி - நிச்சயம் துணிச்சல் காரியாகத்தான் இருக்கவேண்டும். “எங்கள் - தமிழ், எங்! கள் தமிழ்' என்று நாம் எவ்வளவுதான் நீட்டி முழக்கிக் கூச்சல் போட்டாலும், இருப்பது ஒரு முழத் தமிழ்நாடு- இதில் கீறல் , பேர்வழி யல்லரது கையெழுத்துப் போடத் தெரிந்த அளவிலிருந்து கணக்கிட்டுப் பார் த்தாலும் எழுத்து வாசனை உள்ளவர்களோ ' அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை' என்ற கதையில்தான் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, தமிழ் நாட்டில் எழுதிப் பிழைப்பது என்பது ஓர் எமப் ... பிரயத்தனம். இந்த நிலையைச் சாயத்தீடு என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. இன்றைய சமுதாய நிலையில் எழுத்தாளன் மட்டுமல்ல, மத்தியதர வர்க்கத்தின் நிலை முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது; இருக்கும். சமுதாய அமைப்பு சீர்பட்டால் ஒழிய, நாட்டில் கல்வி வளராது; கலை வளராது; எழுத் தாளன் வளர மாட்டான், அந்தச் சீர்பாடு ஏற்படுகின்ற காலத்தில் இம்மாதிரியான துணிச்சல் காரியங்களுக்கு இடமிராது. அது வேறு விஷயம், கமலாம்பாள் புதுமைப்பித்தனைக் கணவராகக் கை: பிடித்தபோது. இந்த விதமான துணிச்சலுக்கு இடமில்லை, பி. ஏ. படித்தவர், தாசில், சொக்கலிங்கம் , 'பிள்ளையின் குமாரர், செய்துள்ள குடும்பத்தின் தலைப்பிள்ளை. --இந்த மாதிரிதான் கமலாம்பாளுக்கு புதுமைப்பித்தளைத் தெரிந்திருக்குமே ஒழிய, அவர் ஒரு எழுத்தாளர் என்பது தெரிந்திருக்க முடியாது. அது மட்டுமல்ல. அந்த எழுத் தாளரோடு சேர்ந்து தானும் . கதை எழுத ஆரம்பித்து விடுவோம். என்பதும் எதிர்பார்த்திருக்க முடியாத விஷயம். திருவனந்தபுரத்தில் , “ராமகிருஷ்ணா ஹவுஸ்* என்ற வீடு ராமகிருஷ்ண பிள்ளை என்பவர் கட்டியது. அதில் கமலாம்பாள் சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வியாய்ப் பிறந்தாள், கமலாவின் தந்தை இப்போது உயிரோடு குமார் தான் - ஒழிய,