பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - நாட்டு கண்டிருந்தோம்... புதுமைப்பின் ரோடிலிருந்து 4 இது இ இகரம் வருஷத்தில் என்றே ஒரு நாள் இரவில்... சென்னை, 170, ராயப்பேட்டை : ஹை ரோடிலிருந்த

  • புதுமைப்பித்தன்* வீட்டில், புதுமைப்பித்தனும்' நானும்

பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சமயத் தில் ஒரு தமிழ். நாட்டுக் கவிஞர்' அங்கு வந்து சேர்ந்தார். அவர் எழுதி: யுள்ள பாடல்கள் புதுமைப்பித்தனு க்குப் பிடிக்காத. சரக்கு. வந்தவர் பேசிக் கொண்டிருந்து.பிட்டுச் சும்மா போகாமல் புதுமைப்பித்தனைப் பார்த்து, என்ன சோவி! உங்கள் கதையை யும் என் கவியையும் தமிழ் நாட்டார் உணரவேயில்லை. நீங்களும் நானும். ஆயிரம் வருஷம் தப்பிப் பிறந்து விட்டோம்! என்று கூறி அங்கலாய்த்துக். கொண்டார். புதுமைப்பித்தன் பதில் சொன்னார்: ஆமாடா, நீ ஆயிர வருஷம் பிந்திப் பிறந்து விட் டாய், நான் ஆயிர வருஷம் முந்திப் பிறந்துவிட்டேன்* இன்றைய தமிழ் நாடு நம் இருவரையும் எப்படிப் புரிந்து, கொள்ளும்?........' கவிஞருக்குக் கிடைத்த சூடு இருக்கட்டும் ... புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் சிறந்த கதாசிரியர், எனினும் தமது மேதையைத் தமிழ் நாடு உணரச் சக்தி யற்றுக் கிடக்கிறதே என்ற ஏக்கம் புதுமைப்பித்தனுக்கு, இருந்ததுண்டு. ஆனால், இன்று அவரது மறைவுக்குப்பின்