பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் நடு நிலைமையான ஆராய்ச்சி என்பது எங்கள் கருத்து.. புதுமைப்பித்தனிடம் அழகிரிசாமி அன்றுதான் பழகத் தொடங் கினர். எனவே புதுமைப்பித்தனை நோக்கி, ' * நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பண்டித நண்பர்கள் கோபப்படுவதில் அர்த்தம் உண்டா? என்று கேட்டார். புதுமைப்பித்தன் சொன்ன பதில் இதுதான்: பண்டிதர்தானே? நமது பண்டி தர்களுக்கு நம் இலக்கியம் பல்லாயிரம் வருஷங்களுக்கு முந்தியது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை. பரிணாம தத்துவப்படி தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்ருல்தான் நம்மளவனுக்குத் திருப்தி! இதுமைப்பித்தனும் நண்பர் அழகிரிசாமியும் 14-ம் தம்பர். பஸ்ஸுக்காக ஒரு ஸ்டாப்பில் நின்று கொண்டிருந் தார்கள். பஸ் வர வெகு நேரமாகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து வந்தது.

  • 'இது எண்ணி இவ்வளவு நேரம் கழித்து வருகிறது!'

என்றார் அழகிரிசாமி. அதுவா? இந்த பஸ்தான் ராமனைக் காட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பி வருகிற 3. நேர் 21 .Dாகத் தானே செய்யும்? என்றார் புதுமைப்பித்தன். " Kாதுமைப்பித்தன் வீட்டுக்குச் சில எழுத்தாள நண் பர்கள் சென்றார்கள். புதுமைப்பித்தன் தரையில் கிழிந்து. போன - பாயில் உட்கார்ந்திருந்தார். வந்திருந்தவர்களை வர வேற்று உட்கார வைப்பதற்காகக் கிழிந்து போயிருந்த இன் னொரு பாயை இழுத்து ஒட்டுப்போட்டு விரித்து, உட்கா ருங்கள். இதுதான் எழுத்தாளரின் சங்கப்பலகை1 சும்மா ஐடட்காருங்கள்! என்று கிழிந்த பாயை சுட்டிக்காட்டினார் புதுப்பித் என்.