பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புதுமைப்பித்தன்' சூரல் அவரது , கதைகளிலே எதிரொலித்தது. சொப்பன வஸ்தையிலே சிக்கி, இனவு காணும் இந்தக் கலைஞளல்ல புதுமைப்பித்தன். . . ', புதுமைப்பித்தன் வாழ்க்கையின் குரூர வசீகரங்களைக் கண்டு ஒப்பாரி வைக்கவில்லை. அவற்றைக் கண்டு சிரிக் கும்படி தம்மைப் பழக்கினார்; அவரும் சிரித்தார். ஆனால் வாழ்க்கையின் யதார்த்தத்துவத்தை நேருக்கு நேராகக் கண்டு சொன்ன புதுமைப்பித்தன் அந்த யதார்த்தத்துவத்தை எதிர் கால நம்பிக்கைப்பாதையை நோக்கித் திருப்பி விடவில்லை, சமூகத்தைப் பார்த்து அவர் கேள்விக் குறிகளை அடுக்கினார். ஆனால் அவற்றுக்கு அவர் விடை காண முடியவில்லை. அன்றாட வாழ்க்கையின் வேதனைக் குரலை மறந்து சிசிப்ப தற்குக் கதை சொன்னாரே யொழிய வேதனையை நீக்கும் மார்க்கத்தைக் கூறவில்லை; காண வில்லை. மக்களது கஷ்டங் களை உணர்ந்து, அவர்கள் படும் கொடுமையைக் கண்டு அவர் சீறியெழுந்தார்; ' 'அந்த , வாழ்க்கையின் கசப்பைக் கண்டு முகம் சுழித்தார், ஆனால் அந்தக் கொடுமையை, 'கசப்பைப் போக்க அவர் வழி காணவில்லை.. மனித சமுதாயத்தின்மீது நிர்ப்பந்தம்சமாகத் திணிக்கப்பட்ட கசப்பைக் கண்டு, மனித சமுதாயத்திடமிருந்தே அவர் விலகி நிற்க முயன்றார். அப்படி நிற்காமல், அவருக்கு இருந்த யதார்த்தத்துவ சக்திக்கும் உருவ அமைதிக்கும், ஆழ்ந்த கண்ணோட்டத்துக்கும் அவர் மக்களிட, மிருந்து எட்டி விலகி நின்று கதை சொல்லா மல், மக்களோடு ஒட்டி நின்றே தமது இலக்கியங்களைச் சிருஷ்டித்திருந்தாரா னால். மாக்ஸிம் கார்க்கியைப்போல் சிறந்த எழுத்தாளராக மட்டுமின்றி, சிறந்த வழிகாட்டியாகவும் அவர் விளங்கியிருக்க முடியும். ஆனால் அதில் அவர் தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். . எனினும், புதுமைப்பித்தன் தமிழ் இலக்கியத்திலேயே ஒரு வைரம் பாய்ந்த எதார்த்தவாதியாகத் திகழ்கிறார். இல் லாததைக் கனவு கண்டு, இருப்பதாகக் கதை கட்டி - வாழ்ந்த சமூகத்திலே, அவர் ஒருவர் தான் இருட்டிலே இருந்ததை - சமூகத்தின் யதார்த்த நிலையை : ஸ்பஷ்டமாக