பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் எடுத்துக் கூறினார். தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று வேலை செய்து பரங்கி நோகைச் சம்பாதித்துக் கொண்டு ஊர்" திரும்பும் பறைச்சி மருதி, உன்னாலே என் உசிரெத்தானே; எடுத்துக்கிட்டுப் போவ முடியும்?...யோசிச்சிப் பாரு...ஒண்ைொ xே நயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடி மா? என்று எமனைப் பார்த்துக் கேட்கும் வெள்ளைக் கோயில் கிழவி,

  • 'என்னை என்ன . பிச்சைக்காரின்னு நினைச்சே? என்று

கேட்கும் கவந்தன் வாய்ப்பட்ட விபசாரி, சார், கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது' என்று கூறும் யந்திர மனிதனை ஹோட்டல் செர்வர், * ' அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது. இதைத் தின்னு பாரு. இனிச்சுக் கிடக்கும்! என்று வேதாந்த விசாரத்துக்கு அடிகொடுக்கும் கந்தசாமிப் பிள்ளையின் புதல்வி வான சிறுமி, சாபத்துக்குத்தானே விமோசனம்? பாடத்துக்கு உண்டா? என்று தன்னையே கேட்டுக்கொண்டு மீண்டும் 'கல்லாகிப் போகும் 'அகல்யை-.இத்தியாதி கதா பாத்திரங் கலால் தான் புதுமைப்பித்தன் சிறுகதை உலகத்தின் மன்ன ராக முடிந்தது.. நானறிந்தவரையில், 'தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாக் கண்டத்திலேலே புதுமைப் பித்தனுக்கு ஈடான எந்தச் சிறுகதை ஆசிரியனும் இல்லை' என்றே சொல்லத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் யார்? . இலக்கியத் திருடனின் பேய்க் கனவு; புத்த #சிரியர் களுக்கு ஒட்டக்கூத்தன்; வலுவற்றுக் கிடந்த தமிழ் வசத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி;. 'உலக இலக்கியம் சத் சங்கத்தில் தாமாகவே இடம் பிடித்துக்கொண்ட மேதை; சிறுகதை இலக்கியத்தின் ஆசிய ஜோதி;, இலம் - எழுத் தாளர்களின் , லட்சியம்: வதார்த்தவாதிகளின் முன்னோடித் தமிழ் நாட்டில் எழுதிப் பிழைப்பது என்eது எத்தளை அபாயகரமானது என்பதைத் - தமது உயிரையே பணயம் வைத்துக் காட்டிச் சென்றன. உதாரணம்-இவர்தான் புதுமைப்பித்தன்!