பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் கேள்வி : பண்டை இலக்கியத்தில் அவருடைய கவனத்தைக் கவர்ந்த நூல்கள் என்ன? தமிழின் மகோன்னதமான படைப்பு என்று அவர். எதைக் கூறிவந்தார்? பதில் : பண்டைய இலக்கியங்களில் கம்பராமாயணம், திருப் குறள், கலிங்கத்துப் பரணி, அப்பர் தேவாரம், நாலாயிரக் பிரபந்தத்தில் பெரியாழ்வார், ஆண்டாள் பாசுரங்கள், காரைக் காலம்மையார், பட்டினத்தார் பாடல்கள், சித்தர் பாடல்கள், பின்னால் வந்த சிற்றிலக்கியங்களான நந்திக்கலம்பகம், முக் கூடற் பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, பஞ்சலட்சணத் திருமுக விலாசம், விறலிவிடு தூதுக்கள் முதலியவை எல்லாமே அவரைக் கவர்ந்திருந்தன என்றே சொல்லலாம். தமிழன் மகோன்னதமான படைப்பு என்று அவர் ' கருத்தியது கலம் ராமாயணம்தான், “கம்பன் தான் எனக்குத் தமிழ் நடை யைக்' கற்றுத் தந்தவன் என்று அவரே கூறுவார். ஒரு பெண்ணை வருணிக்கும்போது அவரைக் • * கவிதா ரசிகனுக்குக் கம்பன் மாதிரி?' என்று கூட அவர் வருணித்திருக்கிறார், கேள்வி : சிலப்பதிகாரம் பற்றி அவர் எதுவும் பிரஸ்தாபித்துள்ள தாக நான் படித்ததில்லை. அந்தக் காப்பியம் அவரைக் கவு? வில்லையா? கவர்ந்திருந்தும் அது பற்றி எழுதச் சந்தர்ப்பம் இல்லாது போயிற்று? பதில் : : சிலப்பதிகாரம் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை என்பது உண்மைதான். என்றாலும், அந்தக் காவியத்தை அவர் படிக்கவில்லையென்றோ, அது அவரைக் கவரவில்லையென்றே சொல்லமுடியாது. அவர் சிலப்பதிகாரத்தையும் நன்கு கற்றி ருக்கிறார் என்பதை ' அவரது 'சிற்பியின் நரகம்' என்ற கதையைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பட்டினப்பர் லையையும், சிலப்பதிக்காரத்தையும் L.டித்து, அவற்றில் கணி