பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 287 கல்கியோடு நடத்திய வாக்குவாதக் கட்டுரைகள், அபூர்ணமாக நின்று விட்ட 'அன்னை இட்ட தீ என்ற நாவலின் சில அத்தி விரயங்கள் ஆகியவைதான், இவற்றையெல்லாம் நான் ஏற் கெனவே சேகரித்துக் கொடுத்தாயிற்று. அவை இன்னும் புத்தகமா 3 வெளிவராததற்கு நான் பொறுப்பாளியல்ல, கேள்வி: - புதுமைப்பித்தன் எழுத்துக்களைப்பற்றி உருப்படியான மதிப்பீடுகள் புத்தக உருவில் வந்துள்ளதா? உதிரியாக வந் துள்ள கட்டுரைகளில் எவை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்தன? பதில்: . ஒரு சில "புத்தக வடிவில் வந்துள்ளன, ஏன் பார்வையில் எட்டவரையில் இரா. தண்டாயுதம் தமிழ்ச் சிறுகதை முன் ஹோ.கள்' என்ற தலைப்பில் எழுதியள்ள நூலில் புதுமைப் பித்தனைப் பற்றிப் பல பக்கங்களில் சற்று நீளமாகவே எழுதி யிருக்கிறார். திருநெல்வேலி தனித்தமிழ்க் கழகம் நடத்திய 'புதுமைப்பித்தன்' பற்றிய கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற 'பொதியவெற்பன்' என்ற இளைஞரின் கட்டுரையும் நூல் வடிவில் வந்துள்ளது. சுமார் 100 பக்கமுள்ள இந்த நூல் இளைஞர் ஒருவரின் முயற்சி என்ற முறையில் பாராட்டத்தக்க தாகவே உள்ளது. அண்மையில் 'மதுரை' பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் புதுமைப்பித்தன் பற்றிய திறனாய்வு ஒன்றை எழுதியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். நான் அதனை இன்னும் பார்க்கவில்லை. வெளி நாட்டிலும் புதுமைப்பித்தளைப் பற்றி44 ' மதிப்பீடுகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, சோவியத் நாட்டில் எல். பைச்சிக்கினா என்ற பட்டமேற் படிப்பு மாணவர் ஒருவர். புதுமைப்பித்தனைப் பற்றி ஓர் ஆய்வுரை எழுதி முடித்திருக்கிறார். இதுவும் என் பார்வைக்கு இன்னும் கிட்டவில்லை, உதிரியாக வந்த கட்டுரைகளில் பலவும் யானை பார்த்த குருடர்ஆன் சொன்ன கதையாகத்தான் உள்ளன. ஏததி வது ஒரு அம்சத்தைப் பாராட்டுவது அல்லது குறை கூறுவதும் என்ற முறையில்தான் உள்ளன. புதுமைப்பித்தனைப் பற்றி