பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 . புதுமைப்பித்தன் - எனவே அவர் காலத்திலும் அவருக்குப் பின்னும் தமிழில் எதார்த்த இலக்கியம் படைக்க விரும்பிய எந்தவொரு எழுத்தா.', ளரும் புதுமைப்பித்தனின் செல்வாக்குக்கு ஆளாகாமற் போல் வில்லை எனலாம். இந்தப் பாதிப்பு கூடவோ, குறையவோ, துலாம்பரமாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம். நானும் 8. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் பல எழுத்தாளர்களும் இந்தச் செல்வாக்குக்கு ஆளானவர்கள் தான். அருங்கச் சொன்னால் சமுதாய உண்மைகளைக் கருப்பொரு னாகக் கொண்டு தமிழில் சிறுகதைகளை எழுத முற்பட்ட இலக்கிய கர்த்தாக்களுக்கும் புதுமைப்பித்தனின் சிறு கதைகளே பாலபாடமாகவும், மூலபாடவும் விளங்கின, விளங்கி வருகின்றன என்பதே அவரது தனிச் சிறப்பாகும். அதே சமயம் அவரிடம் தென்பட்ட பலவீனங்களும், சில வக்கிரப் பார்வைகளும், தனிமனித வாதமும் இன்றைய எழுத் தானிருக்கு ஒரு பாடமும் எச்சரிக்கையும் ஆகும். கதை எழுதும் உத்தி, கதையின் வடிவம், கதையில் . இடம் பெறும் கருப்பொருள், சமுதாயச் சூழ் நிலை, காலம். களம் ஆகியவற்றுக்கேற்பு கதையின் நடையை மாற்றும் சிறப்பு, வைரம் பாய்ந்த சொல்லாட்சி, வளமிக்க வசன நடை, மற்றும் எதார்த்தமான பிரதிபலிப்பு முதலிய பல அம்சங்களில் வருங்கால எழுத்தாளர்களும் புதுமைப்பித்தனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ உண்டு. எனவே வருங்காலத்திலும் அவரது பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் என்பதில் ஐயமில்லை. அவர் அடியெடுத்துக் கொடுத்த பாதையில், போட்டுக் கொடுத்த அஸ்திவாரத்தில், தெம்பூம் திராணியும் மிக்க புதிய புதிய இலக்கியங்கள் தோன்றத் தோன்றத்தான், அவரது, பாதிப்பு புதியன புகுதலுக்கு இடம் விட்டு விலகிக்கொள்ளும். அந்தப் பாதிப்பினால் , ஆலம். விழுதுபோல்' தரையிறங்கி , வேர் பாய்ச்சித் தனிமரமாகும் கிளை மரங்கள் தோன்றத் தோன்றத்தான் அந்தத் தாய் மரத்தின் பாதிப்பும் முற்றுப்பெறும் என்றே நான் கருது கிறேன். -முற்றும்