பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் . கடைசியாக, சொக்கலிங்கம் பிள்ளை தருவதாக ஒப்புக்கொண்ட தொகைக்கு, புதுமைப்பித்தன் கோர்ட் டில் டிகிரி வாங்கித்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. அது வேறு கதை. புதுமைப்பித்தன் தந்தை மோடு பாகப் பிரிவினை செய்து கொண்டவுடன், தந்தைக் கும் தமக்கும் இனி யாதொரு வாரீசுப் பாத்தியதையும் இல்லை என்பதற்கு - விடுதலைப் பத்திரமும் எழுதிக் கொடுத்து விட்டார், ஆனால் புதுமைப்பித்தன் தமக்குக் கிடைத்த நிலத் தைக்கூடக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அதையும் தின சரி: யை விட்டு விலகிய காலத்தில் விற்று விட்டார். அவ சது பாகத்துக்குக் கிடைத்த நிலப்பகுதியைச் சுற்றி, உற்றார் உறவினர், தந்தை முதலியோருடைய நிலப்பகுதி கள் இருந்தாலும், அவர் தமது பாகத்தை ஒரு முகம்மதிய இக்குக் குறைந்த விலைக்கு விற்று விட்டார். 'குடும்பச் சொத்தை ஒரு துலுக்கனுக்குப் போயர் , விற்பது?* * நமது வய லுக்கு மத்தியிலே அயல்' சாதிக்காரனைப் புகுத்திவிட் டானே, பாவி! 'குலத்துரோகி' முதலிய விருதுகள் புதுமைப்பித்தனுக்கு வந்து சேர்ந்தன. இந்தப் பாகப் பிரிவினையைப் பற்றிப் புதுமைப்பித் தன் பின்வருமாறு கூறுவார்: அவர்களைப் பழிக்குப் பதி வாங்க எனக்கு இந்த ஒரு வழிதான் திறந்து கிடந்தது. உபயோகப்படுத்தி விட்டேன். என் குடும்பத்தார் என் னைத் தவிக்க விட்டார்கள். அந்தப் பாவத்தின் கறையை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கட்டும் என்று தான். அவர் களுடைய தொடர்ச்சியான நிலத்தைத் , துண்டாக்கி, இல)டயே வேறு ஒரு சொந்தக்காரனைச், சொருகி விட்டேன். தினம் தினம் அவர்கள் நினைக்கட்டும்; சங்கடம் வரும் போதாவது நினைக்கட்டும். - இதுவே. (அவர் ஆத்மார்த்த மாகக் கூறிக்கொள்ளும் சமாதானம்; ' வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் வஞ்சினம்! புதுமைப்பித்தன் தமது நிலத்தை விற்றுக் காசாக் கியபோது அவரது சித்தப்பா சுப்பிரமணிய பிள்ளை - ஒரு யோசனை சொன்னார். வீணாகப் பணத்8 நச் - 1. செலவு