பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்வதகுமாசி பத்துப் பதினைந்து ரூபாய் ஆகியிருக்கும். இது ஒன்றும் அதிகச் செலவும் அல்ல; அநாவசியச் செலவும் அல்ல. ஆனால் புதுமைப்பித்தன் அன்று ரயிலில் முதல் வகுப்பில் - கிட்டத்தட்ட எழுபத்தைந்து ரூபாய் டிக்கெட்டில் - ரே” யாணம் செய்தார். 'பட முதலாளி' அல்லவா? இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் ஒன்றல்ல; இரண் ..ல்ல, எதை நினைத்துத் துக்கப்படுவது, எதை நினைத்துச் சிரிப்பது என்பதே தெரியவில்லை. தெரிந்த தொழிலை வைத்து லோகத்திலே பிழைக்க முடியாது போலிருக்கே?', என்று , புதுமைப்பித்தன் சிருஷ் டித்த கடவுள் : கந்தசாமிப் பிள்ளையிடம் பேசுகிறார். புதுமைப்பித்தன் தமக்குத் தெரிந்த தொழிலை வைத்துப் பிழைக்க முயன்றிருந்தால், நன்றாகவே பிழைத்திருக்கக் கூடும். ஆனால், 'தெரித்த தொழிலை வைத்து ஓரளவாவது பிழைக்கலாம்; தெரியாத தொழிலை வைத்துப் பிழைக்கவே முடியாது' என்ற உண்மையை, பர்வதகு மாரி புரொடக் ஷன்ஸ் என்ற பகற் கனவு புதுமைப்பித்தனுக்குக் கற்றுக் கொடுத்து விட்டது