பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-15 --- புண்ணிய பூமி 30-1-48 அன்று வகுப்புவாத 'வெறியனாள கோட்ஸே மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றான், அந்த வகுப்புவாதி புனா நகரவாசி; புனா நகரப் பத்திரிகை ஒன் றின் ஆசிரியன். காந்திஜியின் கொலை நடந்த சமயத்தில் புதுமைப்பித்தன் பம்பாயிலிருந்த கே.டி, தேவர் என்னும் நண்பக்கு ஒரு கடிதம் எழுதினார். கே.டி. தேவர் ஆர்வம் மிகுந்த தமிழ் அன்பர். இப்போது அவர் கோயமுத் தூர் சக்திக், காரியாலய அதிபராக இருக்கிறார். புதுமைப் பித்தனின் புனா நகர வாசத்தின்போது அவரது நட்பைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் தேவர். தேவருக்கு எழுதிய தமது கடிதத்தில் புதுமைப்பித்தன் பின்வருமாறு எழுதியிருந்தார்: 1'....மகாத்மாவின் மேனி எரியுமுன்னம் புனா எரிய ஆரம்பித்து விட்டது. புனா என்ற வார்த்தை 'புண்ய : என்பதன் சிதைவு என்று சொன்னார்கள். அதன் அர்த் தம் புரிய இத்தனை நாட்கள் ஆயிற்று. இருகண் குருட் னைத்தானே நல்ல கண்ணுப் பிள்ளை என்பார்கள்! அதே மாதிரி சரித்திரத்தின் பாவத்தைக் கட்டிக் கொண்டது இந்த ஊர். எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை.... காந்திஜியைக் கொன்றவனைப் பிறப்பித்துவிட்ட பாவத் தால் புண்ணிய பூமி பாவ பூமியாக மாறியதைக் கண்டு புதுமைப்பித்தன் மனம் புழுங்கி எழுதியிருக்கிறார். ஆனால், புனா நகரம் 'வகுப்புவாத வெறியனைப் 'பிறப்பித்து விட்ட